பி2பி கடன் தளங்களுக்கு செக் வைத்த ஆர்பிஐ.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..!

சென்னை: இந்தியாவின் பி2பி கடன் தளங்கள் தற்போது கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. கடன் தளங்களின் அடிப்படையாக இருந்த பல நடைமுறைகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பி2பி தளங்கள் குறைந்தபட்ச வருமானம் வழங்குதல், எப்போது வேண்டுமானாலும் பணம் வித்டிரா செய்யும் முறை ஆகியவற்றைத் தடை செய்துள்ளது.

மேலும், பி2பி தளங்களை முதலீட்டுத் தயாரிப்பாக விளம்பரப்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தளங்கள் கடன் வழங்குபவர்கள் மற்றும் கடன் பெறுபவர்களை இணைப்பதாகக் கூறினாலும், பெரும்பாலும் வைப்புத்தொகை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்குபவர்களாகவும் செயல்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

பி2பி கடன் தளங்களுக்கு செக் வைத்த ஆர்பிஐ.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..!

இந்த தளங்களில் பணம் கொடுத்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ள முடியும் என்ற வசதி இருப்பதால் அதிகப்படியான மக்கள் இதில் முதலீடு செய்து வந்தனர். ஆனால், புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மூலம் இந்த வசதிக்குப் பாதிப்பு ஏற்படுவது மட்டும் அல்லாமல் இத்துறையில் முதலீடு செய்தவர்கள் வெளியேற வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த புதிய விதிமுறைகள் பி2பி கடன் தளங்களின் செயல்பாட்டை முற்றிலுமாக பாதிக்கும் என்பதால், இத்தகைய P2P கடன் திட்டத்தில் 10 முதல் 15 லட்சம் பேர் முதலீடு செய்துள்ள 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும். இந்தியாவில் முன்னணி பி2பி கடன் தளங்களாக Liquiloans, RupeeCircle, India P2P மற்றும் Faircent ஆகியவை திகழ்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் பி2பி கடன் சேவைத் துறை வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது. பாரத் பே, கிரெட் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டதன் மூலம் இந்த வளர்ச்சி அதிகரித்தது. பாரத் பே 12% கிளப், கிரெட் 9% கிளப் என்ற பெயரில் முறையே 12% மற்றும் 9% வரை வட்டி வருமானம் தருவதாகக் கூறுகிறது. இவை இரண்டும் closed groups ஆக செயல்பட்டு வந்தன. ஆனால் இந்த நடைமுறையும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.

பி2பி தளங்கள் மூலம் ஒரு நபர் மற்றொரு நபருக்கு கடன் கொடுக்க முடியும். கடன் கால அவகாசம் முடிந்த பிறகு திரும்பக் கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் உடனடி பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தினர். அதாவது, மூன்று மாத கால இடைவெளிக்குப் பிறகு, திரும்பக் கிடைக்கும் பணத்தை ஒருவர் விருப்பப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே பணத்தை திரும்ப பெற முடியும்.

இது பணத்தை டெபாசிட் செய்பவர்களுக்கு ஒரு கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் காரணத்தால் அதிகமானோர் பணத்தை முதலீடு செய்யத் தொடங்கினர். ஆனால் வட்டிக்கு கடன் வாங்குபவர் திருப்பி செலுத்துவதற்கு முன்பாகவே டெபாசிட் திரும்பக் கொடுக்கப்படுவதால் பி2பி தளங்களே அதிக லாபம் ஈட்டத் தொடங்கின. ஆனால் வங்கிகளைப் போல் இத்தகைய தளங்களுக்கு ஆர்பிஐ-யின் கடுமையான விதிமுறைகள் இல்லை என்பதால் சில பாதுகாப்பு அச்சுறுத்தலும் உள்ளது.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் டெபாசிட் செய்தவர்கள் உடனடி பணத்தை வித்டிரா செய்யும் முறையைத் தடை செய்துள்ளது. கடன் கால அவகாசம் முடிந்த பிறகுதான் பணம் திரும்பக் கிடைக்கும். அனைத்து கடன் திரும்பச் செலுத்தப்படும் தொகையும் ஒரு எஸ்க்ரோ கணக்கில் செலுத்தப்பட வேண்டும். கடன் திரும்பச் செலுத்தப்பட்ட ஒரு நாள் கழித்துத் தான் அது கடன் வழங்குபவருக்கு வழங்கப்பட வேண்டும். மேலும், பி2பி தளங்கள் தங்கள் சேவைகளுக்கு நிலையான கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் ஆர்பிஐ தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறை பி2பி கடன் தளங்களை மிகப்பெரிய மறுசீரமைப்பில் தள்ள உள்ளது மட்டும் அல்லாமல், இத்துறை வர்த்தகம் அதிகளவில் பாதிப்பதோடு, பல நிறுவனங்கள் மூடப்படவும் வாய்ப்புகள் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+