சென்னை ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நகரம் என்ற பெயரில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஏற்கனவே பாக்ஸ்கான் சென்னை தொழிற்சாலையை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வரும் வேளையில்..
கடந்த வாரம் தைவான் நாட்டின் பாக்ஸ்கான் இன்டஸ்ட்ரியல் இன்டர்நெட் என்னும் FII நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழு தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பேசினர். இந்த கூட்டம் தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் குறித்து இருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது எனவும் செமிகண்டக்டர் ஃபேப்ரிகேஷன் தொழிற்சாலையை அமைக்கவும் வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது தைவான் நாட்டின் பாக்ஸ்கான்-க்கு போட்டியாக மற்றொரு நிறுவனமான Pegatron களத்தில் இறங்கியுள்ளது. தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலினுடனான சந்திப்பில், தைவான் தொழில்நுட்ப நிறுவனமான பெகாட்ரான் கார்ப்பரேஷனின் தலைவர் டி.எச்.துங் (T H Tung), தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்கும் தனது நிறுவனத்தின் உற்பத்தித் தளத்தின் திறனை விரிவுபடுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் Apple நிறுவனத்தின் முக்கிய சப்ளையராக இருக்கும் பெகாட்ரான் நிறுவனம் 1100 கோடி ரூபாய் முதலீட்டில், சென்னையில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள சிங்கபெருமாள்கோவிலில் உள்ள மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் தனது தொழிற்சாலையை நிறுவி, உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் 2021 இல் இந்தியாவில் நுழைந்தது.
இந்த தொழிற்சாலை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் முழுமையாக செயல்படத் தொடங்கியது. பெகாட்ரான் நிறுவனமும் பாக்ஸ்கான் நிறுவனத்தை போலவே ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 ஸ்மார்ட்போன்களை அசெம்பிள் செய்கிறது.

ஆப்பிள் நிறுவனம் அதன் செயல்பாடுகளில் பெரும்பகுதியை சீனாவிலிருந்து இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு மாற்றி வரும் வேளையில், சீனாவில் பல பகுதிகள் தற்போது கலையிழந்து காணப்படுவது மட்டும் அல்லாமல் பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் மாட்டிக்கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில் தான் பாக்ஸ்கான் மட்டும் அல்லாமல் பெகாட்ரான்-ம தனது உற்பத்தியை தமிழ்நாட்டில் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதற்காக தான் பெகாட்ரான் கார்ப்பரேஷனின் தலைவர் டி.எச்.துங் தமிழக முதல்வர் எம்.கே.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பெகாட்ரான் நிறுவனத்தின் விரிவாக்கம் குறித்து பேசியுள்ளார்.
பெகாட்ரான் சென்னையில் உள்ள தொழிற்சாலையை விரிவுபடுத்தி தமிழகத்தில் கூடுதல் முதலீடு செய்வதை உறுதி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பாக்ஸ்கான், பெகாட்ரான் மத்தியில் போட்டி உருவாகியுள்ளது, ஆனால் பாக்ஸ்கான் அதிரடியாக சென்னை, பெங்களூர் என அடுத்தடுத்து தொழிற்சாலையை அமைத்து வருகிறது.
பெகாட்ரான் தமிழ்நாட்டில் தனது உற்பத்தி தளத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு இருக்கும் வேளையில் குறைந்தது 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யும். இதுவேலைவாய்ப்பை தேடும் அனைவருக்கும் பெரிய வாய்ப்பாக அமையும் எனவே, எல்லோரும் ரெஸ்யூம்-ஐ ரெடி பண்ணுங்க.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications