உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமான ஆப்பிள் தனது தயாரிப்புகள் அனைத்தையும் சொந்தமாக தொழிற்சாலையை அமைத்து தயாரிக்காமல் ஒப்பந்த உற்பத்தியாளர்களை வைத்து உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி கூட்டணி நிறுவனமான Pegatron இந்தியாவில் ஏற்கனவே தொழிற்சாலையை வைத்து ஆப்பிள் கருவிகளை தயாரித்து வரும் வேளையில் தற்போது 2வது தொழிற்சாலையை துவங்க உள்ளதாகவும், அதுவும் தமிழ்நாட்டில் துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி கூட்டணி நிறுவனங்கள் சமீபத்தில் இந்தியாவில் தனது உற்பத்தியை அதிகரிக்கவும், மேம்படுத்தவும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வரும் வேளையில் Pegatron தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் தற்போது வெளியாகியுள்ள தகவல் தமிழ்நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
Pegatron நிறுவனம்
Pegatron நிறுவனம் இந்தியாவில் 2வது தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு வருவதாகும், இந்த தொழிற்சாலையை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 6 மாதத்திற்கு முன்பு தான் Pegatron இந்தியாவில் 150 மில்லியன் டாலர் முதலீட்டில் தனது முதல் தொழிற்சாலையை துவங்கியது குறிப்பிடத்தக்கது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Pegatron அமைக்க உள்ள இப்புதிய தொழிற்சாலையில் ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய விற்பனை கருவியான ஐபோன் தயாரிக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்து Pegatron, ஆப்பிள் ஆகிய இரண்டு நிறுவனமும் பதில் அளிக்க மறுத்துவிட்டது. இதேபோல் சொத்துக்களை கைப்பற்றினால் அரசு விதிமுறைகள் கீழ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என Pegatron தெரிவித்துள்ளது.
சென்னை
Pegatron நிறுவனத்தின் 2வது தொழிற்சாலை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தையும், நிலம் குத்தகைக்கு எடுப்பது குறித்தும் பேச்சுவார்த்தை துவங்கப்பட்டு உள்ளது. முதல் தொழிற்சாலை அமைந்துள்ள சென்னை Mahindra World City-க்கு அருகில் தான் 2வது தொழிற்சாலையும் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள்
ஆப்பிள்-க்கு இந்தியா முக்கிய உற்பத்தி தளமாக மாறி வரும் வேளையில், ஏப்ரல் 2022 முதல் பிப்ரவரி 2023 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 9 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
50 சதவீதம் ஸ்மார்ட்போன்
இதில் 50 சதவீதம் ஆப்பிள் ஐபோன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டும் ஒட்டுமொத்த ஐபோன்களில் Pegatron சுமார் 10 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது.


Click it and Unblock the Notifications