உலகெங்கும் பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் காரணமாக பெரிய நிறுவனங்களே தொடர்ந்து நஷ்டம் இல்லாமல் இயங்க போராடி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் கூகுள், மைக்ரோசாப்ட் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களின் வேலை நீக்க நடவடிக்கை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஏற்கனவே 3 முறை ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கை எடுத்த பெலோட்டன் என்ற நிறுவனம் தற்போது 4வது முறையாக 500 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெலோட்டன் நிறுவனம்
அமெரிக்காவின் முன்னணி உடற்பயிற்சி கருவிகள் உற்பத்தி செய்யும் பெலோட்டன் நிறுவனம் தன்னுடைய வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள போராடி வருகிறது என்பதும் ஏற்கனவே மூன்று கட்டமாக செலவை குறைக்கும் வகையில் ஊழியர்களின் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
500 ஊழியர்கள் வேலைநீக்கம்
இதுவரை இந்நிறுவனம் 3000க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மேலும் 500 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
செலவு குறைப்பு
பெலோட்டன் நிறுவனம் தொடர்ந்து நஷ்டமின்றி செயல்பட செலவை குறைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அதன் காரணமாக 500 ஊழியர்கள் வேலை நீக்கம் உள்ளிட்ட ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் வளர்ச்சி
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் பெலோட்டன் நிறுவனம் பல சிக்கல்களை சந்தித்து வந்தது என்பதும் இதன் காரணமாக நிறுவனத்தின் வளர்ச்சிக்காக வேலைநீக்கம் உள்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நஷ்டம்
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகெங்கிலும் உள்ள பொதுமக்கள் அத்தியாவசியம் இல்லாத வகையில் செலவு செய்வதை குறைத்துவிட்டதே பெலோட்டன் போன்ற நிறுவனங்களின் வளர்ச்சி குறைவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. சமீபகாலத்தில் பெலோட்டன் மிகப்பெரிய அளவிலான வாடிக்கையாளர்களை இழந்து உள்ளதாகவும் அதனால் இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications