8ஆவது சம்பள கமிஷன் தொடர்பான அறிவிப்புக்காக 1.2 கோடி மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் தான் பாரத் பென்சனர் சமாஜ் எனப்படும் பாரத ஓய்வூதியதாரர்கள் சங்கம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளது .
ஓய்வூதியதாரர்கள் சங்கம் கடிதம்: இந்தியாவில் பணியில் இருக்கக்கூடிய மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மட்டும் இல்லாமல் ஓய்வு பெற்றிருக்கும் ஊழியர்களுக்கான ஓய்வூதிய தொகையையும் சம்பள கமிஷன் தான் நியமனம் செய்கிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை விலைவாசி, பணவீக்கம் உள்ளிட்டவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு சம்பள கமிஷன் ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகைகளை மாற்றி அமைக்கிறது.

8ஆவது சம்பள கமிஷன்: தற்போது 8ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு இருக்கிறது. எப்பொழுது இதற்கான உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் இந்தியாவின் பழமையான மற்றும் மிகப்பெரிய கூட்டமைப்பான பாரத ஓய்வூதியதாரர்கள் சங்கம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒரு முக்கியமான கடிதத்தை எழுதி இருக்கிறது .
தாமதப்படுத்த வேண்டாம் என கோரிக்கை: அந்த கடிதத்தில் 8ஆவது சம்பள கமிஷனுக்கான உறுப்பினர்கள் மற்றும் தலைவரை விரைவாக நியமனம் செய்ய வேண்டும் என்றும் சம்பள கமிஷனுக்கான குறிப்புரைகளை விரைவாக இறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. சம்பள கமிஷனுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்யாமல் இருப்பது ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி தகவல்கள் பரவுவதாக வருத்தம்: மத்திய அரசு சம்பள கமிஷன் அறிவிப்பை வெளியிட்டு இத்தனை மாதங்கள் ஆன பிறகும் அரசு உறுப்பினர்களையும் தலைவரையும் நியமனம் செய்யாமல் தாமதம் செய்வது ஓய்வூதியதாரர்கள் மத்தியில் மன அமைதியின்மையை ஏற்படுத்தியிருக்கிறது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். அது தவிர 8ஆவது சம்பள கமிஷன் தொடர்பான தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் நிலைமையை கருத்தில் கொண்டு அரசு சம்பள கமிஷன் தொடர்பான நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் , அது தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜனவரி மாதம் அறிவிப்பு: மத்திய அரசு ஜனவரி 16ஆம் தேதியே சம்பள கமிஷன் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு விட்டது. ஆனால் ஐந்து மாதங்கள் நிறைவடைந்து இருக்கும் சூழலிலும் சம்பள கமிஷனின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்யவில்லை. கூடிய விரைவில் அரசு இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என சொல்லப்படுகிறது.
2.5 ஆண்டுகள் தேவைப்படும்?: தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷன் அடிப்படையில் தான் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இது வரும் டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகிறது. 2026 ஜனவரி முதல் எட்டாவது சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பளம் வழங்கியாக வேண்டும். ஏழாவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு அவர்கள் தங்களுடைய பரிந்துரையை வழங்குவதற்கே 2 ஆண்டுகள் எடுத்துக்கொண்டனர் , மத்திய அரசு அதனை ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு மொத்தம் 2.5 ஆண்டுகள் ஆனது.
தாமதமாக வாய்ப்பா? :8ஆவது சம்பள கமிஷனை பொருத்தவரை 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தான் அரசு இது தொடர்பான அறிவிப்பையே வெளியிட்டு இருக்கிறது எனவே மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரைகள் வெளியாவதற்கு 2027 ஆம் ஆண்டு வரை தாமதமாகலாம் என சொல்லப்படுகிறது அப்படி தாமதம் ஆனாலும் மத்திய அரசு 2026 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து கணக்கீடு செய்து ஊழியர்களுக்கு பாக்கி சம்பளத்தை வழங்கிவிடும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications