அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் மற்றும் அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் AI நிறுவனமான ஆந்த்ரோபிக் இடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் AI மாடலை ராணுவ பயன்பாட்டுக்கு முழுமையாக அனுமதிக்க வேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தியுள்ளார். பிப்ரவரி 27க்குள் இதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், பென்டகான் ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.

இது வெறும் பணம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல - ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் எதிர்காலத்தையே பாதிக்கும் முடிவாக இருப்பதால், மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஆந்த்ரோபிக் நிறுவனம் அமெரிக்க ராணுவத்திற்கு எதிராக நின்றால் கட்டாயம் சீனா-வின் ஹூவாய் நிறுவனத்தை போல் மொத்தமாக அமெரிக்காவில் இயங்க முடியாத வகையில் தடை செய்யப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த ஏஐ துறையும் பெரும் அச்சத்தில் உள்ளது.
ஆந்த்ரோபிக் உருவான கதை
ஆந்த்ரோபிக் 2021இல் முன்னாள் ஓபன்ஏஐ ஊழியர்களால் தொடங்கப்பட்டது. தற்போது டாரியோ அமோடி தலைமையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் கிளாட் (Claude) என்ற AI மாடலை உருவாக்கி ஏஐ துறை போட்டியில் பெரும் ஆதிக்கத்தை பெற்றுள்ளது. மேலும் தற்போகு சாட்ஜிபிடியுடன் போட்டியிடும் இந்த மாடல் AI பாதுகாப்பு மற்றும் பொறுப்புணர்வு மீது அதிக கவனம் செலுத்துவதாக அறியப்படுகிறது.
பென்டகான் தற்போது கிளாட் மாடலை தனது ரகசிய நெட்வொர்க்குகளில் பயன்படுத்தி வருகிறது. பாலன்டிர் டெக்னாலஜிஸ் உடன் இணைந்து இந்த கிளாட் மாடலை பயன்படுத்துகிறது. அமெரிக்க பாதுகாப்புத்துறையில் முழுமையாக பயன்படுத்தப்படும் ஒரே AI நிறுவனம் ஆந்த்ரோபிக் தான். அந்தளவுக்கு முக்கியமானது ஆந்த்ரோபிக்.
பிரச்சனை எங்கு தொடங்கியது?
வெனிசுலா தாக்குதல் மற்றும் அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மடுரோவை கைது செய்ய அமெரிக்க ராணுவ நடவடிக்கையில் கிளாட் ஏஐ மாடலை பயன்படுத்தப்பட்டதாக சில அறிக்கைகள் வெளியாகின. இதை ஆந்த்ரோபிக் கடுமையாக மறுத்தது. ராணுவ நடவடிக்கைகள் குறித்து அரசும் தங்களுடைய நிறுவனமும் எந்த காலக்கட்டத்திலும் விவாதிக்கவில்லை என்று தெரிவித்தது.
இந்த சம்பவத்திற்கு பின்பு ஆந்த்ரோபிக் வர்த்தக சந்தையில் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக, அமெரிக்க அரசிடமும்,பென்டகன், பாலன்டிர் டெக்னாலஜிஸ் ஆகிய தரப்பிடம் இருந்து.. ஆந்த்ரோபிக் ஏஐ மாடல் அமெரிக்கர்கள் மீது பரந்த அளவிலான கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படக்கூடாது, தாக்குதல் முடிவுகளை மனிதர் இல்லாமல் AI எடுக்கக்கூடாது என்று எழுத்துபூர்வ உத்தரவு கோரியது.
மேலும் ஆந்த்ரோபிக் பொதுவாக AI மாடலில் "ஹாலுசினேஷன்" (தவறான தகவல் உருவாக்கம்) ஏற்படலாம் என்பதால் உயிருக்கு ஆபத்தான ராணுவ முடிவுகளில் AI-ஐ நம்பக்கூடாது என்று எச்சரித்ததுள்ளது. இவை அனைத்தும் அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்க அரசு எதிர்ப்பு
ஆந்த்ரோபிக் கோரிக்கைக்கு Pete Hegseth கடுமையாக எதிர்த்துள்ளார். ராணுவத்துடன் ஒத்துழைக்கும் AI நிறுவனங்கள் தங்கள் மாடலை முழுமையாக ராணுவ பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அரசியல் அல்லது நெறிமுறை காரணங்களால் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது என்று கூறுகிறார்.
ராணுவ AI எப்போது அரசியல் சார்ப்பு அல்லது கட்டுப்படுத்தப்பட்ட தளமாக இருக்கக்கூடாது என்று Pete Hegseth தெரிவித்தார். இதேபோல் டிரம்பின் AI ஆலோசகர் டேவிட் சாக்ஸும் முன்பு ஆந்த்ரோபிக்-ஐ விமர்சித்திருந்தார்.
ஆந்த்ரோபிக் மறுத்தால் என்ன ஆகும்?
இந்த நிலையில் தான் பென்டகன் ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் AI மாடலை ராணுவ பயன்பாட்டுக்கு முழுமையாக அனுமதிக்க வேண்டும் என்றும், பிப்ரவரி 27க்குள் ஒப்புக்கொள்ள வேண்டும் என கெடு விதித்துள்ளது. இந்த நிலையில் ஆந்த்ரோபிக் மறுத்தால் என்ன ஆகும்?
முதல் கட்டமாக ஆந்த்ரோபிக் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான பென்டகான் ஒப்பந்தத்தை இழக்கலாம். அதை தொடர்ந்து ஆந்த்ரோபிக் மீது பென்டகன் மற்றும் அமெரிக்க அரசு மிக முக்கியமாக "சப்ளை செயின் ரிஸ்க்" என்று முத்திரை குத்தப்படலாம்.
இது பொதுவாக சீனா-வின் ஹூவாவே போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் மிகப்பெரிய குற்றச்சாட்டு. இந்த முத்திரை குத்தப்பட்டால் பென்டகான் தொடர்புடைய அமைப்புகள் ஆந்த்ரோபிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியாது.
இது நிறுவனத்தின் நற்பெயரை பெரிதும் பாதிப்பது மட்டும் அல்லாமல் அமெரிக்காவில் இயங்க முடியாமல் போகலாம். மேலும் போயிங், லாக்ஹீட் மார்ட்டின் போன்ற பெரிய ராணுவ நிறுவனங்கள் கிளாட் பயன்பாடு குறித்து பென்டகன் தரப்பில் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆந்த்ரோபிக்-ன் எதிர்காலம் மொத்தமாக கேள்விக்குறியாகும்
நிதி பாதிப்பு
நிதி ரீதியாக $200 மில்லியன் இழப்பு ஆந்த்ரோபிக்-க்கு பெரிய அளவில் பாதிப்பில்லை. சமீபத்தில் $14 பில்லியன் வருவாய் அறிவித்துள்ளது. ஆனால் ராணுவ துறையில் செல்வாக்கு இழப்பது, அமெரிக்காவில் மொத்தகமாக அரசு தொடர்பான நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்ய முடியாதது பெரும் நெருக்கடியை உருவாக்கும். இந்த இடைவெளியில் மெட்டா, கூகுள், எக்ஸ்ஏஐ போன்ற நிறுவனங்கள் ராணுவ AI பயன்பாட்டுக்கு வரும்.
மொத்தத்தில், அமெரிக்க ராணுவம் மற்றும் AI நிறுவனங்கள் இடையேயான இந்த மோதல் AI தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை பாதிக்கும். பாதுகாப்பு மற்றும் Ethics இடையே சமநிலை காண வேண்டிய அவசியம் உள்ளது. இந்த விவகாரம் உலகளவில் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் ஒழுங்குமுறை குறித்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

ஈரான் போரில் பாகிஸ்தான் இரட்டை வேடம்: சவுதியுடன் போட்ட ரகசிய ஒப்பந்தம் அம்பலம்!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications