டிரம்ப் கொடுத்த பில்டப் உடைகிறது.. வளைகுடா நாடுகளை விட்டு வெளியேற முடிவு செய்யும் அமெரிக்க ராணுவம்!

ஈரான் உடனான அமெரிக்க போர் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும், கடந்த 2 வார காலமாக வளைகுடா நாடுகள் அமெரிக்காவும், அமெரிக்க ராணுவத்திற்கும் எதிராக திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகி வரும் வேளையில் அமெரிக்க பாதுகாப்பு துறை மிகவும் முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் மத்தியிலான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் பெர்சியன் வளைகுடா பகுதியில் இருந்து ராணுவத்தை வெளியேற்றவும் அல்லது ராணுவ இருப்பை குறைக்கவும் அமெரிக்க பாதுகாப்பு துறை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிரம்ப் கொடுத்த பில்டப் உடைகிறது.. வளைகுடா நாடுகளை விட்டு வெளியேற முடிவு செய்யும் அமெரிக்க ராணுவம்!

வளைகுடா நாடுகளில் சுமார் 20 இடத்தில் ராணுவ தளத்தை வைத்திருக்கும் அமெரிக்கா சுமார் 40000 ராணுவ வீரர்களை கொண்டு இயங்கி வருகிறது. ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் செய்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ தளங்கள் பெரிய அளவில் சேதமடைந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க பாதுக்காப்பு துறை இந்த பாதிப்பை சரி செய்து, மீண்டும் கட்டுமானத்தை மேம்படுத்துவதா அல்லது இந்த வாய்ப்பை பயன்படுத்தி ராணுவ வீரர்கள் எண்ணிக்கையை குறைத்து சிறிய படையாக இயங்குவதா என்பதை ஆய்வு செய்து வருவதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

வளைகுடா பகுதியில் நீண்ட காலமாக அமெரிக்கா இருந்து வருகிறது, ஆனால் இதற்கான தேவையும், அவசியமும் தற்போது உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ள வேளையில் இந்த போர் சேதத்தை ஒரு காரணமாக வைத்து வரலாற்றில் கிடைத்த அந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு வெளியேறுவது மூலம் பெரும் செலவுகளை குறைக்க முடியம் என அமெரிக்க பாதுகாப்பு துறை கணக்கிடுகிறது.

மேலும் வளைகுடாவில் இருந்து நீக்கப்படும் அமெரிக்க ராணுவ தளத்தை இஸ்ரேல் மற்றும் ஜோர்டன் நாட்டில் அமைக்கவும் வாய்ப்புள்ளது, ஈரான் உடனான போரில் இஸ்ரேல் ராணுவ தளங்களை அமெரிக்க பெரியளவில் பயன்படுத்தியது.

இதேவேளையில் அமெரிக்கா பாதுக்காப்பு துறை செயலாளர் பீட் செகத் இதற்கான அதிகாரப்பூர்வ ஆய்வை தொடங்க உத்தரவை வெயிடாவிட்டாலும் பென்டகன் கொள்கை அலுவலகம் மற்றும் அமெரிக்க சென்டரல் கமெண்ட் வளைகுடாவில் இருந்து வெளியேறுவது குறித்து ஆய்வு செய்து வருகிறது எனவும் வாஷிங்டன் போஸ்ட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா ராணுவம் வளைகுடாவில் இருந்து வெளியேறுவது தொடர்ரபான பேச்சுவார்த்தை, ஈரான் உடனான அமெரிக்காவின் போரில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள வளைகுடா நாடுகள் கொடுத்த எதிர்ப்பு சிக்னல் வாயிலாகவே வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+