ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டு-ஐ பயன்பாட்டில் இருந்து திரும்ப பெறுவதாக மே 19 ஆம் தேதி அறிவித்த நிலையில், செப்டம்பர் 30 வரையில் அளிக்கப்பட்ட கால அவகாசம் அக்டோபர் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் அக் 8 தேதி முதல் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் ஏற்க மறுப்பதால், தற்போது 19 இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மக்கள் வரிசையில் நின்று 2000 ரூபாயை மாற்றிக் கொள்ள நிற்கின்றனர். மே 19 முதல் அக்டோபர் 7 ஆம் தேதி வரையில் வங்கிகளில் பெரிய அளவிலான கூட்டம் இல்லாமல் மக்கள் எளிதாக மாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 7 ஆம் தேதி மாலை வங்கி நேரத்திற்கு பின்பு, வங்கிக் கிளைகளில் மக்களிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் மற்றும் பிற ரூபாய் நோட்டுகளாக மாற்றும் சேவைகள் நிறுத்தப்பட்டன. அக்டோபர் 8 முதல், மக்கள் அனைவரும் இந்தியாவில் இருக்கும் 19 ரிசர்வ் வங்கி கிளை அலுவலகங்களில் பணத்தை மாற்றிக்கொள்ளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக செப்டம்பர் மாத அறிவிப்பில் ஆர்பிஐ தெரிவித்தது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், தோராயமாக ரூ.3.43 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்ப வந்துள்ளதாகவும், இதன் மூலம் ரூ.12,000 கோடி மதிப்புள்ள நோட்டுகள் இன்னும் மக்களின் பயன்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக நாட்டின் அனைத்து ஆர்பிஐ அலுவலகத்திலும் ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள் குவிந்தனர். இதில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மக்கள் வரிசையில் நின்று 2000 ரூபாயை மாற்றிக் கொண்டிருந்தனர்.
தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கும் 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை மாற்றிக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இதேவேளையில் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப வேண்டுமெனில் எவ்விதமான வரம்பும் இல்லாமல் ரூ.2,000 நோட்டுகளைப் மாற்றிக்கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications