நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சூழ் நிலை நிலவி வருகிறது. மேலும் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கே கஷ்டப்படும் நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் இன்று செய்தியாளார்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், வட்டி விகிதம் குறைப்பு, இஎம்ஐ ஒத்தி வைப்பு போன்றவை பற்றி அறிவிக்கலாம் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
அதோடு தொழில் துறையினர், சிறு தொழில் செய்வோருக்கு சிறப்பு சலுகைகள் இருக்கலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
வட்டி தள்ளுபடி இல்லை
ஆனால் மக்கள் எதிர்பார்த்ததை போல பெரிய அறிவிப்புகள் வெளியாகவில்லை. குறிப்பாக கடன்களுக்கான வட்டி விகிதம், வட்டி தள்ளுபடி, இஎம்ஐ ஆறு மாதம் ஒத்தி வைப்பு போன்றவை இருக்கலாம் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. வீடுகளுக்குள்ளேயே மக்கள் முடங்கி கிடக்கும் நிலையில், மக்களுக்கான இஎம்ஐ விகிதம் தள்ளி வைக்கப்பட்டாலும், வட்டி குறைப்பு செய்யப்படவில்லை.
அவ்வளவாக பயன் இல்லை
மூன்று மாதம் கழித்து மக்கள் நிலுவை செலுத்த வங்கிகள் அனுமதி கொடுத்தாலும், மூன்று மாதங்களுக்கும் சேர்த்து வட்டி செலுத்தியாக வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதனால் ஆர்பிஐ இஎம்ஐக்காக மூன்று மாதம் சலுகை அளித்தாலும் அது மக்களுக்கு அவ்வளவாக பயன் இல்லை என்றே கூறப்பட்டது.
இஎம்ஐ நீட்டிப்பு இல்லை
மேலும் ஏப்ரல் 15வுடன் லாக்வுடன் முடிந்து விடும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்கள், மீண்டும் இரண்டாவது முறையாக மே 3 வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்ட நிலையில் இஎம்ஐ 6 மாதம் வரை நீட்டிக்கபடலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படியான அறிவிப்புகள் ஏதும் வரவில்லை எனலாம்.
தொழில்துறைக்கு எந்த சலுகையும் இல்லை
அது மட்டும் தொழில்துறையினருக்கு குறிப்பாக சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் வெளியாகவில்லை என்றே கூறலாம். எனினும் இதில் ஒரு சந்தோஷப்படக் கூடிய விஷயம் என்னவெனில் வங்கிகள் கடன் அளிக்க தேவையான 50,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறியிருந்தார்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications