சீன மத்திய வங்கி (பிஓசிபி) அரசாங்கப் பத்திரங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது, இது சீன முதலீட்டு சந்தைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா தன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டவும், யுவான் நாணயத்தின் மதிப்பை அதிகரிக்கவும், நிதி புழக்கத்தை எளிதாக்கவும் அரசாங்கப் பத்திரங்களை தீவிரமாக வாங்கி வந்த சீன மத்திய வங்கி இந்த திடீர் முடிவை எடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதில் இருந்து யுவான் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது, தேர்தலுக்கு முன்பு யுவான் தென்னாசிய நாடுகளுக்கும், பிரிக்ஸ் நாடுகள் மத்தியிலும் முக்கிய வர்த்தக நாணயமாக மாறி தனது ஆதிக்கத்தை அதிகரித்து வந்தது. ஆனால் டிரம்ப் வெற்றி பெற்ற பின்பு சீனா மீது சிறப்பு வரி விதிப்பு கொண்டு வரப்படும் என அறிவித்தது முதல் யுவான் மதிப்பு வேகமாக சரிய துவங்கியது.

சீன மத்திய வங்கியின் இந்த முடிவை தொடர்ந்து அரசு பத்திர சந்தைகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டது, அமெரிக்க அரசியலில் ஏற்பட்ட மாற்றத்தின் வாயிலாகவே இத்தகைய மாற்றம் ஏற்பட்டு உள்ளது. யுவான் நாணயத்தின் மதிப்பை பராமரிக்கவும், உள்நாட்டு பத்திர வருமானங்கள் அதிகமாக குறையாமல் தடுக்கவும் சீன மத்திய வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கடந்த 5 மாதமாக சீன மத்திய வங்கி அதிகப்படியான பத்திரங்களை வாங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய முடிவை தொடர்ந்து, சீனாவில் பத்திர வருமானங்கள் ஆரம்பத்தில் அதிகரித்தன, இருப்பினும், வர்த்தக நாளின் முடிவில் 10 ஆண்டு பத்திரங்களின் வருமானங்கள் சற்று மிதமான உயர்வை மட்டுமே எட்டின.
இதேபோல் சீன மத்திய வங்கி தொடர்ந்து 5 மாதங்களாக அதிகப்படியான அரசு பத்திரங்களை வாங்க முக்கிய காரணம் சந்தையில் அளவுக்கு அதிகமான பத்திரங்கள் வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது தான். ஆனால் தற்போது சந்தையில் வர்த்தகத்திற்கு வரும் பத்திரங்களின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்தது. இதன் காரணமாகவே அரசு பத்திரங்களை வாங்குவதை குறைத்துள்ளது.
சீன மத்திய வங்கி பத்திரங்கள் வாங்குவதை நிறுத்தியுள்ளது தற்காலிக நடவடிக்கை என்றும், சந்தை நிலைமைகளின் அடிப்படையில் பொருத்தமான நேரத்தில் மீண்டும் தொடங்கும் என்றும் சீன மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications