ஆன்லைன் பர்னிச்சர் நிறுவனமான பெப்பர்ஃப்ரை-ன் இணை நிறுவனர் அம்பரீஷ் மூர்த்தி லே பகுதியில் மாரடைப்பால் இறந்துவிட்டதாக PepperFry நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனர் ஆஷிஷ் ஷா டிவிட்டரில் தெரிவித்தார்.
ஆஷிஷ் ஷா தனது பதிவில் எனது நண்பன், வழிகாட்டி, சகோதரன், ஆத்ம தோழன் அம்பரீஷ் மூர்த்தி மறைந்துவிட்டார் என்பதை தெரிவிப்பதில் மிகுந்த மனவேதனை அடைகிறேன். நேற்று இரவு லே (Leh) பகுதியில் மாரடைப்பால் உயிரிழந்தார் என்று பதிவிட்டு உள்ளார்.

அம்பரீஷ் மூர்த்தி அதிகளவில் பைக் ரைட் செல்பவர், தற்போது மும்பையில் இருந்து லே வரையில் பைக்-ல் சென்ற நிலையில் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். அம்பரீஷ் மூர்த்தி-யின் மரணம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், கார்பரேட் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் தற்போது பைக்கர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அம்பரீஷ் மூர்த்தி புதிதாக பைக்கில் செல்பவர் இல்லை, தொடர்ந்து பல முறை பல இடங்களுக்கு பைக்கில் பயணம் செய்துள்ளார். ஆனால் இந்த மும்பை - லே பயணத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
அம்பரீஷ் மூர்த்தி ஐஐஎம் கல்கத்தா முன்னாள் மாணவர் மற்றும் மலையேற்ற மற்றும் பைக் டிராவல் ஆர்வலர். அம்பரீஷ் 2012 ஆம் ஆண்டு ஆஷிஷ் ஷாவுடன் இணைந்து மும்பையில் ஓம்னிசனல் ஃபர்னிச்சர் மற்றும் ஹோம் டெகர் நிறுவனத்தை நிறுவினார். பெப்பர்ஃப்ரைக்கு முன், அம்பரீஷ் eBay இல் கன்ட்ரி மேனேஜராக இருந்தார்.
அம்பரீஷ் மூர்த்தி ஜூன் 1996 இல் அவர் நிறுவனத்தில் விற்பனை மற்றும் மார்கெட்டிங் நிபுணராக சேர்ந்தார், அவர் புகழ்பெற்ற கேட்பரி சாக்லேட் நிறுவனத்தில் ஐந்தரை ஆண்டுகள் பணிபுரிந்தார். இதை தொடர்ந்து ICICI Prudential நிறுவவனத்தில் மார்கெட்டிங் மற்றும் கஸ்டமர் சர்வீஸ் பிரிவின் துணை தலைவராக 2 வருடமும் பணியாற்றினார்.
இதன் பின்பு Levi's நிறுவனத்தில் பணியாற்றிய பின்பு Origin Resources என்ற ஒரு மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தை துவங்கினார். இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தை 2005ல் மூடிவிட்டு பிரிட்டானியா நிறுவனத்தின் மார்கெட்டிங் மேனேஜர் ஆக சேர்ந்தார்.

வெறும் 7 மாதத்தில் பிரிட்டானியா நிறுவனத்தை விட்டுவிட்டு, அம்பரீஷ் மூர்த்தி EBAY இந்தியாவி் இணைந்து பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தியா ஆகிய பகுதி வர்த்தகம் மற்றும் நிர்வாகத்தை தலைமை தாங்கினார். சுமார் 6 வருடத்தில் EBAY நிறுவனத்தில் பணியாற்றி வெளியேறிய அம்பரீஷ் மூர்த்தி மீண்டும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்கினார்.
2011 ல் அம்பரீஷ் மூர்த்தி பெப்பர்ஃப்ரை நிறுவனத்தை உருவாக்கி அதே வருடம் டிசம்பர் மாதம் 5 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டினார். இதை தொடர்ந்து பல சுற்றில், பல முதலீட்டாளர்களிடம் இருந்து 240 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை திரட்டி தற்போது 460 மில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications