உலகின் மிகப்பெரிய குளிர்பான நிறுவனமான பெப்சி மற்றும் கோகோ கோலா, ஆகியவை சூடான் நாட்டில் நடக்கும் உள்நாட்டுப் போர் இன்னும் சிறிது காலம் நீடித்தால் கோலா உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சூடான் நாட்டு போரால் அமெரிக்க நிறுவனமான பெப்சி மற்றும் கோகோ கோலா-வை எப்படி பாதிக்கும்..? சூடான் நாட்டில் ஏன் உள்நாட்டு போர் வெடித்தது..?

உலகளவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான கார்பனேடெட் குளிர்பானங்கள், சாக்லேட் தயாரிப்பு மற்றும் அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருள் சூடான் நாட்டில் இருந்து தான் உலக நாடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது போரின் காரணமாக இந்த முக்கிய பொருட்களின் சப்ளை தடைபெற்று பற்றாக்குறை உருவாகியுள்ளது.
சூடான் நாட்டில் நடக்கும் உள்நாட்டு போர் காரணமாக உலக நாடுகளை மட்டுமல்ல, நுகர்வோர் தயாரிப்பு நிறுவனங்களையும் கவலையடையச் செய்துள்ளது. இந்த நிலையில் உலகின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சியில் மூலப் பொருட்களை சப்ளையை சரி செய்ய விரைந்துள்ளது.
கோலா குளிர்பானங்கள், சாக்லேட் தயாரிப்பு மற்றும் அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருள் Gum Arabic. அகாசியா மரத்திலிருந்து இயற்கையாக உருவாகும் ஒரு வகையான கோந்து போன்றைவை. சூடான் நாட்டில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருளாகா விளங்குகிறது.
ஆப்ரிக்காவில் மிகப்பெரிய நாடாக இருக்கும் சூடான் நாட்டில் Sahel என்னும் பகுதியில் இருந்து மட்டுமே உலக நாடுகளின் மொத்த Gum Arabic ஏற்றுமதியில் 70 சதவீதம் வருகிறது. தற்போது சர்வதேச சந்தையில் இருக்கும் Gum Arabic இருப்பு அடுத்த 5-6 மாதங்களுக்கு மட்டுமே போதுமானது.

ஏற்கனவே போர் காரணத்தால் சூடான் நாட்டில் இருந்து Gum Arabic ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது, இதனால் இதன் இருப்பு வேகமாக குறையவும் வாய்ப்பு உள்ளது. இந்த சூழ்நிலையில் சூடான் நாட்டில் நடக்கும் உள்நாட்டு போர் அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்தால் கட்டாயம் பெப்சி மற்றும் கோகோ கோலா போன்ற முன்னணி நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
ஆப்பிரிக்காவில் முக்கிய நாடாக விளங்கும் சூடானில் அதிபர் அல் பஷீர் தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது, சில ஆண்டுகளுக்கு முன்பு அல் பஷீர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவ புரட்சி மூலம் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் என்பவர் ஆட்சியைப் பிடித்தார். ராணுவ ஆட்சி என்றலே பல பிரச்சனைகள் வருவது இயல்பான ஒன்று தான், ஆனால் இந்த பிரச்சனை ராணுவத்திற்குள்ளேயே இரு தரப்புக்கு மத்தியில் எழுத்துள்ளது.
சூடான் நாட்டில் துணை ராணுவ அதிவிரைவு படைகளுக்கும், சூடான் ஆயுதப் படைகளுக்கும் திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த உள்நாட்டு போரில் சுமார் 500க்கும் அதிகமாக பொது மக்கள் இறந்த நிலையில் தொடர்ந்து சூடானில் நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது.


Click it and Unblock the Notifications