இன்று மிகப்பெரிய பிராண்டாக இருக்கும் பல்வேறு நிறுவனங்கள் வேறு பெயர்களில் துவங்கப்பட்டு இருப்பது உங்களுக்கு தெரியுமா? சில பிரபல பிராண்டுகளின் ஆரம்பகாலத்தின் அதன் பெயர்களை பார்க்கும் போது ச்சை.. நல்லவேளை மாத்திட்டாங்க என்றும் தோணும்..
இதன் மூலம் ரிபிராண்டிங் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என நினைக்கவும் தோன்றுகிறது. அந்த வகையில், முற்றிலும் வேறு பெயரில் துவங்கப்பட்ட சில நிறுவனங்களின் பட்டியலை பார்ப்போம்.
சில சமயங்களில் உங்களின் முதல் தேர்வு எப்போதும் சரியாக அமைந்து விடாது. எனினும், வளர்ச்சிக்கான வாய்ப்புகள் எப்போதும் திறந்தே இருக்கும்.
ஃபேஸ்மாஷ் - ஃபேஸ்புக் - மெட்டா
2003 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் ஃபேஸ்மாஷ் பெயரில் ஹார்வார்டு பல்கலைகழகத்தில் துவங்கப்பட்டது. மார்க் ஜூக்கரபர்க் ஹார்வார்டு-இன் விதிகளை மீறியதால், ஃபேஸ்மாஷ் பெயர் மாற்றப்பட்டு திபேஸ்புக்.காம் என பதிவு செய்யப்பட்டது. பின் 2005 ஆம் ஆண்டு இந்த பெயரில் தி எனும் வார்த்தை நீக்க முடிவு எடுக்கப்பட்டது. 2021 அக்டோபர் மாத வாக்கில் ஃபேஸ்புக் தனது தாய் நிறுவன பெயரை மெட்டா என மாற்றயது.
மேட்ச்பாக்ஸ் - டிண்டர்
டேட்டிங் கலாசாரத்தை அடுக்க கட்டத்திற்கு இந்த நவீன உலகில் மாற்றியமைத்தது டிண்டர் ஆப். முதன் முதலில் டிண்டர் ஆப் மேட்ச்பாக்ஸ் எனும் பெயரில் துவங்கப்பட்டது.
எனினும், போட்டியாளர் இதேபோன்ற பெயரை வைத்திருந்த காரணத்தால், இதன் பெயர் டிண்டர் என மாற்றப்பட்டது. இந்த பெயர் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிவேகமாக பிரபலம் அடைந்துவிட்டது.
பேக்ரப் - கூகுள் - ஆல்ஃபாபெட்
கூகுள் நிறுவனம் எதற்காக பேக்ரப் (BackRub) என்று அழைக்கப்பட்டது என உங்களுக்கு தெரியுமா? ஆரம்ப காலத்தில் கூகுள் நிறுவனம் வலைத்தளத்தில் இருந்த பேக்லிங்க்-களின் முக்கியத்துவத்தை ஆய்வு செய்து வந்தது. இதனாலேயே இந்த பெயர் சூட்டப்பட்டது.
எனினும், சர்ச் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பெயர் மாற்றுவது அவசியமானது. பின் Googol எனும் பெயர் வைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான டொமைன் கிடைக்காததை அடுத்து Google என்ற பெயர் சூட்டப்பட்டது. இதன் தாய் நிறுவன பெயரும் ஆல்ஃபாபெட் என மாற்றப்பட்டது.
ஒடியோ - டுவிட்டர்
டுவிட்டர் நிறுவனம் ஒடியோ எனும் பெயரில் துவங்கப்பட்டது. மைக்ரோ-பிளாகிங் வலைத்தளமாக துவங்கும் முன் பாட்காஸ்ட் போன்று துவங்கப்பட்டது. பின் இதற்கான போட்டியாளர்கள் ஐடியூன்ஸ்-ஆக இருந்தது. இதனை சரி செய்ய புதிய பெயர் டுவிட்டர் பயன்படுத்தப்பட்டது.
ரெலண்ட்லெஸ் - அமேசான்
லெண்ட்லெஸ்.காம் எனும் வலைத்தள முகவரியை பிரவுசரில் திறக்கும் போது அமேசான் வலைத்தளம் திறக்கும். ஜெஃப் பெசோஸ் அமேசானுக்கு முன் தேர்வு செய்த பெயர் தான் ரெலண்ட்லெஸ். எனினும், ஜெஃப் பெசோஸ் அகராதியை புரட்டிய போது அமேசான் எனும் வார்த்தையை கண்டறிந்தார். பின் உலகின் நீண்ட ஆறின் பெயர், உலகின் மிகப்பெரிய புத்தக ஸ்டோருக்கு உகந்ததாக இருக்கும் என ஜெஃப் பெசோஸ் முடிவு செய்தார்.
அர்பன்கிளாப் - அர்பன் கம்பெனி
அர்பன்கிளாப் துவங்கப்பட்ட சிறிது காலக்கட்டத்திலேயே அனைவரும் அறிந்து கொள்ளும் பிராண்டாக மாறிவிட்டது. இந்த நிறுவனம் வீட்டுத் தேவைகள் அனைத்திற்கும் சேவைகளை வழங்கி வருகிறது. ஆறு புதிய துணை பிராண்டுகளை துவங்க வேண்டும் என்பதற்காகவும், சர்வதேச அளவில் அறியப்பட வேண்டிய பிராண்டாக மாற வேண்டும் என்பதால் 2020 வாக்கில் இந்த நிறுவனம் அர்பன் கம்பெனியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பிராட்ஸ் ட்ரின்க் - பெப்சி
பெப்சி பிராண்டின் இயற்பெயர் பிராட்ஸ் ட்ரின்க் என உங்களுக்கு தெரியுமா? பெப்சியை உருவாக்கிய கலெப் டி பிராட்ஹம் பெயரை தழுவி இந்த பானம் பிராட்ஸ் ட்ரின்க் என அழைக்கப்பட்டது. வடக்கு கரோலினாவில் உள்ள தனது மருந்தகத்தில் இவர் இதனை உருவாக்கினார். பின் இந்த பெயரில் வித்தியாசமான அம்சம் எதுவும் இல்லை என்பதை பிராட்ஹம் முடிவு செய்தார்.
இதன் காரணமாக ஐந்து ஆண்டுகள் கழித்து பெயரை பெப்சி-கோலா என ரிபிராண்டு செய்தார். இந்த பெயர் அஜீரனத்தை குறிக்கும் டிஸ்பெப்சியா எனும் வார்த்தையை தழுவி சூட்டப்பட்டது. இந்த பானம் அஜீரனத்தை சரி செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications