சூரியகாந்தி எண்ணெய், உப்பு.. இந்திய உணவு பொருட்கள் தயாரிப்பில் பெப்சி-யின் முக்கியமான மாற்றம்..!

இந்தியர்களின் விருப்பமான உருளைக்கிழங்கு சிப்ஸ் பிராண்ட் ஆன லேஸில் பாமாயில் பயன்படுத்தப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இதனை அடுத்து அந்த நிறுவனம் சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்தி சிப்ஸ் தயாரிப்பதற்கான பரிசோதனையில் கடந்த வருடம் முதல் ஈடுபட்டுள்ளது. இதேபோல் உப்பு பயன்பாட்டிலும் முக்கியமான மாற்றத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

உருளைக்கிழங்கு சிப்ஸ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது பெப்சிகோ இந்தியா நிறுவனத்தின் பிராண்டான லேஸ் தான். இந்தியாவில் ஒரு லேஸ் பாக்கெட் ரூ.10க்கே கிடைக்கிறது. ஆனால் பெப்சிகோ நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிப்ஸ்களை தயாரிப்பதற்காக பாமாயில் மற்றும் பாமோலினை கலந்து பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாமாயில் மனிதர்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியது என கூறி சமூகவலைதளங்களிலும் கடும் விமர்சனம் எழுந்தது.

சூரியகாந்தி எண்ணெய், உப்பு.. இந்திய உணவு பொருட்கள் தயாரிப்பில் பெப்சி-யின் முக்கியமான மாற்றம்..!

இதே பெப்சிகோ நிறுவனம் அமெரிக்காவில் விற்பனை செய்யும் லேஸ் உருளைக்கிழங்கு சிப்ஸ்களை தயாரிப்பதற்கு இதயத்திற்கு உகந்த எண்ணெயாக கருதப்படும் சூரியகாந்தி எண்ணெய், மக்காச்சோளம் மற்றும் கேனோலா எண்ணெய்களை பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் பாமோலின் மற்றும் பாமாயிலை பயன்படுத்தி வருகிறது. இது வெளிச்சத்துக்கு வந்ததால் லேஸ் நிறுவனம் கடுமையான விமார்சனத்தை எதிர்கொண்டது.

இதுக்குறித்து பெப்சி நிறுவனத்தின் இந்திய செய்தி தொடர்பாளர் கூறுகையில், பெப்சி தான் இயங்கும் ஒவ்வொரு சந்தையிலும் உயர்ந்த தரம் மற்றும் சுவையான உணவு மற்றும் பானங்களை வழங்குவதில் உறுதியாக உள்ளது. ஆனால், வெவ்வேறு நாடுகளில் உள்ள உள்ளூர் விருப்பத்தேர்வுகள், உற்பத்தி திறன்கள், மூலப்பொருட்களின் கிடைக்கும் தன்மை மற்றும் சந்தை கட்டமைப்பு ஆகிய பல்வேறு காரணங்களால், உணவு மற்றும் பானங்களுக்கான செய்முறைகள் வேறுபடுகின்றன.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெப்சி தயாரிப்புகளில் உள்ள பொருட்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் ஒவ்வொரு பொருளிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், நுகர்வோர் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பொறுப்பான முடிவுகளை எடுக்க முடியும்.

மேலும் இந்தியாவிலும் சூரியகாந்தி எண்ணையை உடன் பாமோலின் எண்ணெய் கலந்து பயன்படுத்தி சிப்ஸ்களை தயாரிப்பதற்கான சோதனைகளில் கடந்த ஆண்டில் இருந்து ஈடுபட்டிருப்பதாக பெப்சிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பெப்சி தயாரிப்புகளில் அதிக அளவிலான உப்பு இருப்பதாக செய்தி வெளியான நிலையில், தங்கள் நிறுவன திண்பண்டங்களில் உப்பின் அளவை ஒரு கல்லோரிக்கு 1.3 மில்லி கிராம் என்ற அளவில் குறைத்து வருவதாகவும் 2025 ஆம் ஆண்டுக்குள் நிறுவனத்தின் 75 சதவீத உணவு பொருட்களில் இது எட்டப்பட்டு விடும் என்றும் பெப்சிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் திண்பண்டங்களை விற்பனை செய்யக்கூடிய பெரும்பாலான நிறுவனங்கள் அண்மைக்காலமாக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் விற்பனை செய்யும் பொருட்களில் தரமற்ற மற்றும் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய பொருட்களை இவை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனையடுத்து எண்ணெய் மற்றும் உப்பு அளவில் மறுசீரமைப்பு செய்த முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாக பெப்சிகோ உள்ளது.

அந்த வகையில் பெரும்பாலான திண்பண்டங்களை தயாரிக்க கூடிய நிறுவனங்கள் பாமாயிலை பயன்படுத்துவதாகவும், சூரியகாந்தி மற்றும் சோயாபீன் எண்ணெயை விட பாமாயிலின் விலை குறைவாக இருப்பதால் அவை இவற்றை பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நெஸ்ட்லே நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பவுடரில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. சமீபகாலமாக இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளில் உள்ள குறைபாடுகளை சமூகவலைதளங்களை சேர்ந்த சில இன்ஃப்ளூயன்சர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இது நாட்டிற்கே அவர்கள் செய்யக்கூடிய பெரிய சேவையாக அமைந்துள்ளது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+