பெரம்பலூர் காலணி தொழிற் பூங்காவில் க்ராக்ஸ் பிராண்ட் காலணி தயாரிக்கும் முதல் தொழிற்சாலை நவம்பர் 28 ஆம் தேதி தொடங்க உள்ளது. தமிழ்நாடு தமிழ்நாட்டில் காலணிகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஹப் ஆக மாற்ற வேண்டும் என்ற முக்கியத் திட்டத்துடன் சென்னையில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் பெரம்பலூர் பகுதியில் காலணி தொழிற் பூங்கா உருவாக்கியது.
காலணிகளுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் பிரத்தியேக காலணி தொழிற் பூங்காவில் முதல் காலணி நிறுவனமாக ஜேஆர் ஒன் ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை அமைத்து இந்த மாத இறுதியில் உற்பத்தியைத் துவங்க உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் மற்றும் ஷூடவுன் ஃபுட்வேர் கோ ஆகியவற்றின் கூட்டு நிறுவனம் தான் இந்த ஜேஆர் ஒன் ஃபுட்வேர் நிறுவனம். இந்த ஒரு தொழிற்சாலை வாயிலாகப் பெரம்பலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 4,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கப்படுவதாகத் தெரிகிறது.
இந்தத் தொழிற்சாலையில் அதிகளவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பெண்களால் இயக்கப்படும் தொழிற்சாலையாக உருவாக்கத் திட்டமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு உள்ள இந்தத் தொழிற்சாலையின் திறப்பு விழா நவம்பர் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தத் தொழிற்சாலைக்கான அடிக்கல்-ஐ 2022 நவம்பர் 28 நாட்டினார்.
ஃபீனிக்ஸ் கோத்தாரி ஃபுட்வேர் நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் சுமார் 1700 கோடி ரூபாய் முதலீட்டில் காலணிகளைத் தயாரிக்கும் தொழிற் பூங்கா-வை அமைக்க 1700 கோடி ரூபாய் முதலீடு செய்வதாகத் தமிழ்நாடு அரசுடன் ஆகஸ்ட் 2022 ஒப்பந்தம் செய்தது.
பெரம்பலூரில் அமைக்கப்படும் இந்த மாபெரும் காலணி தொழிற்சாலை மூலம் இப்பகுதியை சுற்றியுள்ள கரூர், நாமக்கல், விருத்தாசலம், சிதம்பரம், மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் இப்பகுதிகளில் இருக்கும் மக்கள் வேலைவாய்ப்புக்காகச் சென்னை, ஓசூர், கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற தொழிற் நகரங்களுக்குப் பயணிப்பது குறையும்.


Click it and Unblock the Notifications