உலகம் முழுவதும் ஏஐ கருவிகளின் பயன்பாடு நாளுக்கு நாள் பல துறைகளுக்கும் விரிவடைந்த வண்ணம் இருக்கிறது. இதற்காக பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஏஐ செயலிகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன. மனிதர்கள் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக செய்யக்கூடிய வேலைகளை எல்லாம் ஏஐ தொழில்நுட்பங்கள் கைப்பற்றி வருகின்றன.
ஏஐ தேடுபொறி: பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய உற்பத்தி திறனையும் செயல் திறனையும் மேம்படுத்துவதற்கு ஏஐ கருவிகளை அதிகளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய நிறுவனமாக இருக்கிறது பெர்பிளெக்சிட்டி ஏஐ (Perplexity AI) . இந்த நிறுவனம் ஏஐ அடிப்படையில் செயல்படக்கூடிய கூகுள் போன்ற தேடுபொறிகளுக்கு மாற்றாக comet என்ற ஒரு தேடுபொறியை அண்மையில் அறிமுகம் செய்தது.

ஏஐ ஏஜெண்ட்: இந்த தேடுபொறி குறித்து விரிவாக பேசியிருக்கக் கூடிய பெர்பிளெக்சிட்டி தலைமை செயல் அதிகாரியான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இனி ஹெச்.ஆர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் அசிஸ்டெண்ட் வேலைகளுக்கு மனிதர்களே தேவைப்பட மாட்டார்கள் என தெரிவித்திருக்கிறார் . comet தேடுபொறி நம்முடைய ஜிமெயில், கேலண்டர், லிங்குடின் போன்ற செயலிகளை அணுகி நமக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திறன் கொண்ட ஒரு ஏஐ ஏஜென்ட் ஆக இருக்கும் என கூறி இருக்கிறார்.
ஹெச்.ஆர் வேலைகள்: உதாரணமாக ஏஐ துறையில் சிறந்து விளங்கும் ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் பயின்ற நபர் வேலைக்கு தேவைப்படுகிறார் என ஒரு பிராம்ப்ட் கொடுத்தால் போதும் comet உடனே லிங்குடின்னில் இத்தகைய தகுதி கொண்டவர்களை தேடி அவர்களின் மின்னஞ்சல்களை எடுத்து அவர்களுக்கு எப்படி மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்ற டிராஃப்டையும் செய்து கொடுத்து விடும்., நாம் சரிபார்த்து ஓகே கூறினால் போதும் என தெரிவித்துள்ளார். அந்த நபருடன் நேர்காணல் ஏற்பாடு செய்வதையும் இதுவே பார்த்து கொள்ளும். மனிதர்கள் இந்த வேலையை செய்ய ஒரு வாரம் ஆகும், ஆனால் ஏஐ ஒரு பிராம்ப்டிலேயே செய்துவிடும் என கூறுகிறார்.

உதவியாளர் வேலை: ஒரு அதிகாரி இருக்கிறார் அவருக்கு உதவியாளராக இருப்பவர் அவருக்கான அன்றைய நிகழ்வுகளை பட்டியலிடுவது, நேர்காணல்கள், ஆலோசனை கூட்டங்கள் திட்டமிடுவது, கூட்டத்திற்கான நோட்ஸ் தயாரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறார். இதனை இது செயல்திறனோடு comet ஏஐ முடித்து கொடுக்கும், எனவே உதவியாளராக ஒருவர் இருக்க வேண்டிய தேவையே இனி இருக்காது என தெரிவித்துள்ளார்.
விரைவில் ஹெச்.ஆர் வேலையும், அசிஸ்டெண்ட் வேலையும் முழுமையாக ஏஐ வசம் சென்றுவிடும் என அவர் கூறியுள்ளார். ஏற்கனவே ஏஐ வளர்ச்சி பல வைட் காலர் வேலைகளை மனிதர்களிடம், இருந்து பறித்து வருகிறது. இந்த சூழலில் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இவ்வாறு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
More From GoodReturns

ஜெமினி, கிளாட்-க்கு வேட்டு..!! OpenAI நிறுவனத்தில் உருவாகிய புதிய பதவி..! இனி இதற்கு தான் எதிர்காலம்..!!

எங்களுக்கு இனி Engineers தேவையே இல்ல; AI போதும் – Salesforce CEO திமிர் பேச்சு..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications