மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்க உதவும் அமைப்பு.. வீட்டில் இருந்தே பயிற்சி பெறலாம்..!

இந்தியாவில் மாற்று திறனாளிகளின் நலனுக்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தாலும் அவர்களுக்கு சுயதொழில் புரிவதற்கான வாய்ப்புகளை வழங்கினால் அவர்களாலும் நாட்டின் ஜிடிபியில் குறிப்பிட்ட அளவு பங்களிப்பை வழங்க முடியும்.

இந்தியாவில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களால் இயன்ற சுயதொழிலை செய்வதற்கான வாய்ப்பு வழங்கினால் நிச்சயம் பொருளாதார ரீதியாகவும் அவர்களின் வாழ்க்கை உயரும் என சொல்லப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்க உதவும் அமைப்பு.. வீட்டில் இருந்தே பயிற்சி பெறலாம்..!

அண்மையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கான தேசிய மையம் (National Centre for Promotion of Employment for Disabled People (NCPEDP) ) சார்பாக ஹெலன் கெல்லர் வாழ்நாள் சாதனை விருது திலகம் ராஜேந்திரன் என்பவருக்கு வழங்கப்பட்டது.

இவர் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வேலை வாய்ப்புகளையும் தொழில் வாய்ப்புகளையும் வழங்கினால் அவர்கள் மிகப்பெரிய அளவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கை கொடுப்பார்கள் எனக் கூறியுள்ளார்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி உரையாற்றிய அவர் உதயம் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 1.5 லட்சம் நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளின் பெயரில் செயல்படுகின்றன எனக் கூறியுள்ளார். ஜூலை 2020 முதல் ஜூலை 2022 வரையிலான காலகட்டத்தில் இந்த 1.5 லட்சம் சுய தொழில் நிறுவனங்கள் 1.35 லட்சம் கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளன என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

மாற்றுத்திறனாளிகளை பொருளாதாரத்தில் பங்கேற்க விடாமல் செய்வதன் மூலம் ஒட்டுமொத்தமாக உலகத்தின் ஜிடிபியில் 5 முதல் 7 சதவீதம் வரை சரிவடைகிறது என அண்மையில் உலக வங்கி கூட ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்காமல் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து செய்யக்கூடிய தொழில் வாய்ப்புகளை வழங்கினால் நிச்சயம் அவர்கள் சிறப்பாக வருவார்கள் என இவர் கூறுகிறார்.

இதற்காக திலகம் ராஜேந்திரன் சார்பாக NEDAR (Network of Entrepreneurs with Disabilities for Assistance and Rehabilitation) என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவியுள்ளார். மாற்று திறனாளி தொழில் முனைவோருக்காகவே இந்த அறக்கட்டளையை இவர் நிறுவியுள்ளார்.

இதன் மூலம் சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பல்வேறு பயிற்சிகள், ஒரு தொழிலை எப்படி தொடங்குவது, இந்த தொழிலுக்கு மற்றவர்களோடு எப்படி ஒரு இணைப்பினை மேற்கொள்வது, ஒரு பொருளை எப்படி சந்தைப்படுத்துவது, அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பன உள்ளிட்ட தொழிலுக்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் அனைத்து வாய்ப்புகளும் இதில் வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கும் திறன் இருந்தாலும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர் அந்த நிலைமை போக வேண்டும் என்பதற்காக தான் இப்படி ஒரு அறக்கட்டளையை நிறுவியதாக அவர் கூறியுள்ளார். தற்போது இவர் அறக்கட்டளை சார்பாக 19 மாநிலங்களை சேர்ந்த 4000 மாற்று திறனாளிகளுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து இந்த சுயதொழில் வாய்ப்புகளை கற்றுக் கொள்வதற்காக ஆன்லைன் முறையிலேயே பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுவதாக இவர் கூறுகிறார். தற்போது 18 மாநிலங்களில் இருந்து சுமார் 250 பேர் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இவர் அளித்த பயிற்சி மூலம் சுயதொழில் தொடங்கி மாற்றுத்திறனாளிகள் ஆண்டுக்கு 14 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்கள் என தெரிவிக்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+