பொது தேர்தலும், தேர்தல் பிரச்சாரமும் பரபரப்பாக நடந்து வரும் வேளையில், கடந்த இரண்டு தேர்தலுக்கும், இந்த தேர்தலுக்கும் பெரிய வித்தியாசம் காணப்படுகிறது. இந்த பொதுத் தேர்தலில் அனைத்து கட்சியினரும் பொருளாதாரம், வரி, பணவீக்கம் குறித்து அதிகம் பேசி வருகின்றனர்.
தேசிய அளவில் அதிகரித்து வரும் செல்வச் சமத்துவமின்மை பிரச்சனையைக் கையாள வேண்டும் எனவும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துள்ளது. மேலும், பிரதமர் மோடி முன்வைத்த, குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டங்கள் என்ற குற்றச்சாட்டையும் காங்கிரஸ் கடுமையாக நிராகரித்துள்ளது.

இந்த அரசியல் சர்ச்சைக்கு மத்தியில், மத்திய நிதி அமைச்சகம் நேரடி வரி வசூல் தரவுகளை வெளியிட்டு புதிய கேள்விகளை அரசியல் வட்டத்தில் எழுப்பியுள்ளது, இது மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் மொத்த நேரடி வரி வசூல் அளவு அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது.
2023-24 ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த நேரடி வரி வசூல் கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 17.7 சதவீதம் அதிகரித்து 19.58 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தனிநபர் வருமான வரி பங்கீடு 50.06 சதவீதத்தில் இருந்து 53.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதேபோல் கார்ப்பரேட் வரி பங்கீடு 49.6 சதவீதத்தில் இருந்து 46.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்த வரி உயர்வுக்கு முக்கிய காரணமாகத் தனிநபர் வருமான வரி மற்றும் பத்திர பரிவர்த்தனை வரி (Securities Transaction Tax) வசூலில் ஏற்பட்டுள்ள உயர்வு தான். மறுபுறம், நிறுவனங்களின் லாப வரி வசூல் குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தனிநபர் வருமான வரி மற்றும் பத்திர பரிவர்த்தனை வரி வருவாய், நிறுவன லாப வரி வருவாயை விடக் கிட்டத்தட்ட இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன.
இதுக்குறித்து ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ள அட்டவணையில் ஒவ்வொரு ஆண்டின் பிப்ரவரி மாத நிலவரப்படி, மொத்த வரி வருவாயில் கம்பெனி லாப வரி மற்றும் தனிநபர் வருமான வரி ஆகியவற்றின் பங்கை இதில் காட்டுகிறது.
இந்த தரவுகள் படி கம்பெனி லாபத்தில் பெறப்படும் வரியின் பங்கு குறைந்து வரும் போக்கில் உள்ளது, அதே சமயம் தனிநபர் வருமான வரியின் பங்கு அதிகரித்து வருகிறது. பிப்ரவரி 2024 நிலவரப்படி, இந்த இரண்டு வரி விகிதங்களுக்கிடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது.
தற்போது மொத்த நேரடி வரி வசூல் வருவாயில் 28 சதவீதம் தனிநபர் வருமான வரியாக உள்ளது, இது ஒரு புதிய உச்சமாகும். கார்ப்பரேட் வரி வசூல் பங்கீடு 26 சதவீதமாக குறைந்துள்ளது. 2019 நிதியாண்டில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவிக்க கார்ப்பரேட் வரி குறைப்பு மூலம் நாட்டின் கார்பரேட் வரி வசூல் பெரிய அளவில் குறைந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான அரசாங்கம் செப்டம்பர் 2019 இல் கொண்டுவந்த வரி சலுகைகள் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், நேரடி வரிகளின் பங்கு குறைந்து வருகிறது, அதே சமயம் மறைமுக வரிகளின் பங்கு அதிகரித்து வருவதாகவும் தரவுகள் காட்டுகின்றன.
கம்பெனிகள் மற்றும் தனிநபர்களின் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரிகள் நேரடி வரிகள் எனப்படுகின்றன. குறைவாக சம்பாதிப்பவர்களிடம் குறைவான வரி வசூலிக்கப்படுவதால் இவை "முற்போக்கானவை" (progressive) எனக் கருதப்படுகின்றன.
மறுபுறம், மத்திய உற்பத்தி வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) போன்றவை மறைமுக வரி. இது அனைத்து பொருட்கள் மீது விதிக்கப்படுவதால் வருமானம் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை
பிற்போக்கானவை என விமர்சனம் செய்யப்படுகிறது.

1980 களில் இருந்து படிப்படியாக வீழ்ச்சியடைந்து வந்த மறைமுக வரிகளின் பங்கு கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்துள்ளது. மறுபுறம், அதிகரித்து வந்த நேரடி வரிகளின் பங்கு, சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்து சரிவை பதிவு செய்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் எப்போதும் இல்லாத வகையில் 2.10 லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது. இந்த தரவுகள் வாயிலாக, வரி வசூலில் அளவு மூலம் நாட்டின் வர்த்தகம் மற்றும் அதன் மூலம் அரசுக்கு வரி வருமானம் அதிகரித்துள்ளதை காட்டுக்கிறது.
இந்த அரசியல் சர்ச்சைக்கு மத்தியில், இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் பிரிவின் தலைவர் சாம் பித்திரோடா, இந்தியாவில் இதுவரை இல்லாத மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிடப்படாத "பாரம்பரிய வரி" (Inheritance Tax) விதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications