பணத் தேவை இருக்கும்போது பிறரிடம் கடன் வாங்குவதை விட பர்சனல் லோன் அல்லது நகையை வைத்து பெரும் கடன்களுக்குத் தான் பலர் முன்னுரிமை அளிக்கின்றனர். அதற்கு ஏதுவாக வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு பர்சனல் லோன்களுக்கு வட்டி விகிதங்களை வழங்குகிறது. அதுவும் பண்டிகை காலங்களில் பல கடன் வழங்குனர்கள் பர்சனல் லோன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் செய்து வாடிக்கையாளர்களை கவர்கின்றன. நல்ல கிரெடிட் ஸ்கோரை வைத்திருக்கும் நபர்களுக்கு வங்கிகள் வட்டி விகிதத்தில் தள்ளுபடிகளை வழங்குகின்றன. அதற்கான ப்ராசசிங் கட்டணங்களுக்கும் சில வங்கிகள் சலுகைகளை வழங்குகின்றன.
திடீரென்று மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும் அல்லது வேலை இழப்பால் கடும் நிதி சிக்கலுக்கு ஆளானாலும் தனிநபர் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். தனிநபர் கடன் என்பது எந்தவித அடமானமும் இல்லாமல் பெரும் கடனாகும். கடன் வழங்குனர்கள் உங்களுடைய கடன் தகுதியை மதிப்பிடுவதற்காக முதலில் கிரெடிட் ஸ்கோரைத் தான் ஆராய்வார்கள்.

அதன் பின் உங்களுடைய மாத வருமானம், தொழில் விவரங்கள் மற்றும் உங்களுடைய நிறுவனத்தின் விவரங்கள் போன்ற பல காரணிகளை கருத்தில் கொண்டு கடன் வழங்குவார்கள்.
பர்சனல் லோனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால் பர்சனல் லோன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். இந்தப் பதிவில் 10 முதல் 10.99 சதவீத வட்டி விகிதத்தில் பர்சனல் லோன்களை வழங்கும் வங்கிகள் குறித்த விபரங்களைப் பார்ப்போம்.
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா: பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா தனிநபர் கடனுக்கான மலிவான வட்டி விகிதத்தை 10 சதவீதத்தில் இருந்து வழங்குகிறது. 5 ஆண்டு திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ. 5 லட்சம் கடனுக்கான மாதத் தவணையாக (EMI) ரூ.10,624 செலுத்த வேண்டும்.
பஞ்சாப் நேஷனல் பேங்க்: பஞ்சாப் நேஷனல் பேங்க் 10.4 சதவீத வட்டி விகிதத்தில் பர்சனல் லோன்களை வழங்குகிறது. 5 ஆண்டு கடன் திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ. 5 லட்சம் கடனுக்கான மாதத் தவணையாக ரூ.10,772 செலுத்த வேண்டும்.
இண்டஸ்இண்ட் பேங்க்: இந்த பேங்க் தனிநபர் கடன்களுக்கு 10.49 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தை வழங்குகிறது. 5 ஆண்டு கடன் திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ. 5 லட்சம் கடனுக்கான மாதத் தவணையாக ரூ.10,744 செலுத்த வேண்டும்.
HDFC பேங்க்: HDFC பேங்க், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை 10.5 சதவீதத்தில் இருந்து வசூலிக்கிறது. 5 ஆண்டு கடன் திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ. 5 லட்சம் கடனுக்கான மாதத் தவணையாக ரூ.10,747 செலுத்த வேண்டும்.
பஞ்சாப் & சிந்து பேங்க்: பஞ்சாப் & சிந்து பேங்க் தனிநபர் கடனுக்கு 10.75 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தை விதிக்கிறது. 5 ஆண்டு கடன் திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.5 லட்சம் கடனுக்கான EMI ரூ.10,809 செலுத்த வேண்டும்.
ICICI பேங்க்: தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை 10.8 சதவீதத்தில் இருந்து வசூலிக்கிறது. 5 ஆண்டு கடன் திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.5 லட்சம் கடனுக்கான EMI ரூ.10,821 செலுத்த வேண்டும்.
பேங்க் ஆஃப் இந்தியா: பேங்க் ஆஃப் இந்தியா தனிநபர் கடனுக்கு 10.85 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தை விதிக்கிறது. 5 ஆண்டு கடன் திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.5 லட்சம் கடனுக்கான EMI ரூ.10,834 செலுத்த வேண்டும்.
கனரா பேங்க்: தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை 10.95 சதவீதத்தில் இருந்து வசூலிக்கிறது. 5 ஆண்டு கடன் திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.5 லட்சம் கடனுக்கான EMI ரூ.10,859 செலுத்த வேண்டும்.
கோடக் மஹிந்திரா பேங்க் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஆகியவை தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை 10.99 சதவீதத்திலிருந்து விதிக்கின்றன. ஐந்தாண்டு திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.5 லட்சம் கடனுக்கான EMI ரூ.10,869 செலுத்த வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

எரிபொருள் நெருக்கடி.. அரசு ஊழியர்களின் சம்பளம் 30% வரை கட்..!!



Click it and Unblock the Notifications