இந்தியாவில் பல மாதங்களாக மக்கள் மத்தியில் சமீப காலமாக அதிகரித்து வரும் பாதுகாப்பற்ற தனிநபர் கடன்கள் குறித்துச் சந்தை வல்லுனர்களும், பொருளாதார வல்லுனர்களும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு எச்சரித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி பாதுகாப்பற்ற தனிநபர் கடன்கள் அளவுகள் மற்றும் அதன் பாதிப்புகளை ஆய்வு செய்து புதன்கிழமையன்று வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாதவர்களுக்கு இந்தப் பிரிவு கடன் வழங்குவதை அடிப்படையில் இருந்து குறைக்க வேண்டும் என முடிவு செய்தது.

இதன் வாயிலாக வியாழக்கிழமை அன்று, ரிசர்வ் வங்கி நுகர்வோர் கடன் மீதான ரிஸ்க் அளவீட்டை நான்கில் ஒரு பங்கை அதிகரித்துள்ளது. அதாவது 100% லிருந்து 125% ஆக அதிகரித்ததுள்ளது, சரி இதன் வாங்கிகளுக்கு என்ன பாதிப்பு..? மக்களுக்கு இதன் மூலம் எவ்விதமான பாதிப்புகள் ஏற்படும்...?
ஆர்பிஐ வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கான கன்ஸ்யூமர் கடனின் ரிஸ்க் அளவீட்டை 125 சதவீதமாக அதிகரித்தது மூலம், வங்கிகள் இதற்கு முன்பு 100 ரூபாய் கடன் கொடுத்தால் 9 ரூபாய் அளவிலான மூலதன இருப்பைப் பராமரிக்க வேண்டியிருந்தது, ஆனால் இப்போது வங்கிகள் 11.25 ரூபாய் மூலதன இருப்பை வைத்திருக்க வேண்டும்.

இதனால் வங்கிகள் அதிகப்படியான பணத்தைச் செலவழிக்க முடியாது, மறைமுகமாகக் கடன் கொடுப்பது இதன் மூலம் குறையும். இதோடு ஆர்பிஐ கிரெடிட் கார்ட் லிமிட் மீதான ரிஸ்க் அளவீட்டையும், NBFC-க்கு அளிக்கப்படும் வங்கி கடன் அளவு மீதான ரிஸ்க் அளவீட்டையும் 100% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
ஆர்பிஐ எடுக்கப்பட்ட இந்தப் புதிய நடவடிக்கை நுகர்வோர் கடன்களுக்கு மட்டுமே, மேலும அதிகப்படியான கட்டுப்பாடுகள் வங்கிகளுக்கு மட்டுமே விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் வீட்டுக் கடன் மற்றும் சிறு தொழில்களுக்குக் கடன் வழங்கும் NBFC நிறுவனங்களின் ரிஸ்க் அளவுகளில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படவில்லை.
மேலும் ஆர்பிஐ அறிவித்துள்ள ரிஸ்க் அளவீடுகளின் மாற்றத்தின் மூலம் ஹோம் லோன், ஆட்டோ லோன், கல்வி கடன், தங்க கடன், MSME கடன்கள், மைக்ரோ பைனான்ஸ் கடன்கள் மீது எவ்விதமான பாதிப்பும் இல்லை.
இதோடு எந்தப் பெரிய வங்கிகளிடம் நுகர்வோர் கடன்கள் மீது அதிகப்படியான வர்த்தகப் பங்கீட்டை கொண்டிருக்கவில்லை, இதனால் ஆர்பிஐ அறிவிப்பு பெரிய வங்கிகளை அதிகம் பாதிக்காது. ஆனால் வீட்டுக் கடன் மற்றும் சிறு தொழில்களுக்குக் கடன் போன்ற முக்கியமான துறையில் கடன் அளிக்காமல் நுகர்வோர் கடன்களை மட்டுமே அதிகம் நம்பியிருக்கும் NBFC நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கும்.

இந்திய மக்களின் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்து நிலுவையில் வைத்திருக்கும் தொகை செப்டம்பர் மாதம் 30 சதவீதம் அதிகரித்து 2.17 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதேபோல் பர்சனல் லோன் நிலுவை தொகை 25 சதவீதம் அதிகரித்து 12.47 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்திய மற்றும் சர்வதேச வர்த்தகச் சந்தையில் பொருளாதார வளர்ச்சியில் தடுமாற்றம் இருக்கும் காரணத்தால் கார்பரேட் கடன்களுக்கான டிமாண்ட் குறைந்தது. இதனால் பெரிய வங்கிகளும் ரீடைல் கடன், கன்ஸ்யூமர் கடன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.
இதேவேளையில் இந்திய மக்கள் மத்தியில் வருமானம் அளவில் பெரிய அளவிலான உயர்வு ஏற்படாத நிலையிலும், விலைவாசி அதிகரித்த நிலையில் மக்கள் நிதி பற்றாக்குறையைக் கிரெடிட் கார்ட் வாயிலாகவும், பர்சனல் லோன் வாயிலாகவும் தீர்த்து வருகின்றனர். இதேவேளையில் விலை மிகுந்த பொருட்கள் வாங்குவதைக் கன்ஸ்யூமர் லோன் வாயிலாக வாங்குவது கடந்த 2 வருடமாக அதிகரித்துள்ளது.
ஆர்பிஐ கட்டுப்பாட்டின் காரணமாக கடனுக்கான வட்டி விகிதம் உயருமான என்றால் வாய்ப்புகள் மிகவும் குறைவு, இதற்கு முக்கியமான காரணம் இந்திய வங்கி அமைப்பில் போதுமான நிதி இருப்பு இருப்பதால் வட்டி விகிதம் குறுகிய காலக்கட்டத்திற்கு உயர வாய்ப்புகள் இல்லை என சந்தை வல்லூனர்கள் கணித்தாலும்.. ஆர்பிஐ அறிவிப்பினால் NBFC நிறுவனங்களுக்கு ஏற்படும் வர்த்தக பாதிப்பை ஈடுக்கட்ட வட்டி விகிதத்தை உயர்த்தவும் கணிசமான வாயப்புகள் இருப்பதாக தெரிகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications