அமெரிக்க வர்த்தகச் சந்தையில் மிகவும் பிரபலமான பெயர் தான் இந்தப் பீட்டர் தியேல், இவருக்கு இன்னொரு பெயரும் உள்ளது டான் ஆ பேபால் மாபியா. பேபால் மாபியா குறித்து அறிந்த அனைவருக்கும் பீட்டர் தியேல்-ஐ கண்டிப்பாகத் தெரிந்திருக்கும் பல முன்னணி நிறுவனங்களின் தலைவராகவும், கூட்டாளியாகவும், நிறுவனராகவும் இருந்து வருகிறார்.
புதிய தொழில்நுட்பம், புதிய முதலீடுகள் மீது அதிகம் ஆர்வம் கொண்ட பீட்டர் தியேல் கிரிப்டோகரன்சி ஆதரவாளராகவும், பிட்காயின் ஆதரவாளராகவும் இருக்கும் இவர் பிட்யிகான் அமெரிக்காவிற்கு எதிரான சீனாவின் ஒரு நிதியியல் ஆயுதம் எனத் தெரிவித்துள்ளார்
பீட்டர் தியோல் - டான் ஆ பேபால் மாபியா
பீட்டர் தியோல் பேபால் நிறுவனத்தில் இருந்து பிளான்டயர் உட்பட நிறுவனங்களை உருவாக்கியது மட்டும் அல்லாமல் பேஸ்புக் உட்படப் பல முன்னணி நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளார். மேலும் இவர் அமெரிக்க அரசியலிலும், அரசியல் தலைவர்களுக்கு அதிகளவில் நன்கொடை அளித்தும் உள்ளார். இதனால் வர்த்தகச் சந்தையிலும், அரசியல் வட்டத்திலும் இவர் மிகவும் பிரபலமானவர்.
கிரிப்டோ வர்த்தகம்
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய பீட்டர் தியேல் அமெரிக்க அரசு விரைவில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் மீது முறையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அறிவித்துள்ளார். கிரிப்டோ ஆதரவாளராக மட்டும் அல்லாமல் கிரிப்டோ முதலீட்டாளராகவும் இருக்கும் பீட்டர் தியேல்-ன் இந்தப் பேச்சு கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
சீனாவின் நிதியியல் ஆயுதம்
இதேவேளையில் தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும் போது பிட்காயின் அமெரிக்காவுக்கு எதிராகச் சீனாவின் நிதியியல் ஆயுதமா? என்ற கேள்வி எழுகிறது. பிட்காயின் தற்போது அமெரிக்க டாலரைப் பாதிக்கும் அளவிற்கு நிதியியல் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது எனவும் பீட்டர் தியேல் ரிச்சர்டு நிக்சன் பவுண்டேஷன் கூட்டத்தில் பேசியுள்ளார்.
அமெரிக்கா - சீனா நட்புறவு
பீட்டர் தியேல் மறைமுகமாக டிரம்ப் அரசை ஆதரித்தவர் என்பது ஒருபக்கம் இருந்தாலும், சீனாவுடன் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்களை இவர் அதிகளவில் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்கா - சீனா நட்புறவு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ள இந்த நிலையில் பீட்டர் தியேல்-ன் கருத்து மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications