2030 முதல் பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை.. அய்யய்யோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக ஆட்டோமொபைல் சந்தை மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு காலமாகக் கடந்த 5 வருடமும், அடுத்த 10 வருடமும் கருதப்படுகிறது. ஆம் பெட்ரோல், டீசல் கார்களை மட்டுமே பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டும், தயாரிக்கப்பட்டு உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் எலக்ட்ரிக் கார்கள் மொத்த ஆட்டோமொபைல் சந்தையைத் தனது பயணத்தை மாற்ற முடிவு செய்துள்ளது.

உலக நாடுகளில் சுற்றுச்சூழல் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வரும் இந்தச் சூழ்நிலையில் அதற்கான பல முன்னணி நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்து பருவகால மாற்றத்தைக் கட்டுப்படுத்த ஆய்வுகளைச் செய்து வருகிறது.

இந்நிலையில் பிரிட்டன் அரசு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் சந்தையும் திகைத்து நிற்கிறது. குறிப்பாக இந்திய ஆட்டோமொபைல் சந்தை.

2030ஆம் ஆண்டு

2030ஆம் ஆண்டு

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 5 ஆண்டுகளுக்கு முன்பு 2030ஆம் ஆண்டு முதல் பிரிட்டன் நாட்டின் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்குத் தடை விதிக்கத் திட்டமிட்டார். தற்போது இந்த முடிவை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிடத் திட்டமிட்டு வருகிறது பிரிட்டன் அரசு.

10 வருடம்

10 வருடம்

முதல் பிரிட்டன் அரசு greenhouse gas emissions-ஐ கட்டுப்படுத்த 2040ல் தான் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்குத் தடை விதிக்க முடிவு செய்தது, கடந்த பிப்ரவரி மாதம் 2040ஆம் ஆண்டு இலக்கை 2035க்கு குறைக்க முடிவு செய்தது.

தற்போது 2030ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.

 

ஒரு வாரம்

ஒரு வாரம்

இந்நிலையில் பிரிட்டன் அரசு அடுத்த ஒரு வாரத்தில் தடை உத்தரவை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுவதாகப் பல முன்னணி செய்தி தளங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து எவ்விதமான தகவல்களையும் பிரிட்டன் அரசு இதுவரை வெளியிடவில்லை.

பிரிட்டன் ஆட்டோமொபைல் சந்தை

பிரிட்டன் ஆட்டோமொபைல் சந்தை

பிரிட்டன் அரசின் இந்த அறிவிப்பு பிரிட்டன் நாட்டு ஆட்டொமொபைல் சந்தை மட்டும் அல்லாமல் மொத்த ஐரோப்பிய ஆட்டோமொபைல் சந்தையின் வளர்ச்சியை மாற்றுப்பாதைக்குக் கொண்டு செல்ல உள்ளது.

ஏற்கனவே டெஸ்லா ஐரோப்பிய சந்தையில் தொழிற்சாலையைக் கட்டும் பணி துவங்கியுள்ள நிலையில் பிரிட்டன் அரசு அடுத்த வாரம் வெளியிடப்போவதாகக் கூறப்படும் உத்தரவும் டெஸ்லாவுக்கு ஜாக்பாட்-ஆக மாறும்.

 

இந்தியா

இந்தியா

எலக்ட்ரிக் கார்களின் தயாரிப்புகளுக்கு இப்போது தான் இந்தியாவில் அடித்தளம் போடப்பட்டு வரும் நிலையில் அடுத்த 10 வருடத்திற்குள்ள எப்படிப் பிரிட்டன் அரசின் அறிவிப்புக்கு இணையான ஒரு அறிவிப்பை வெளியிடும்.

பிரிட்டன் நாட்டை ஒப்பிடுகையில் இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது மிகவும் அதிகம். ஆகவே பிரிட்டனுக்கு முன்பு இந்தியா இத்தகைய முடிவை எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பெட்ரோல், டீசல் கார்கள்

பெட்ரோல், டீசல் கார்கள்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்குத் தடை விதித்தால் பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஆட்டோமொபைல் சந்தை மாபெரும் பாதிப்பை எதிர்கொள்ளும்.

இந்தச் சூழ்நிலையில் எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தை இந்தியாவில் உருவாகியுள்ளதா..? என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் பதில். அந்த வகையில் பிரிட்டன் அரசின் அறிவிப்பை இந்தியா எப்படி எதிர்கொள்ளும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: petrol diesel
English summary

petrol and diesel cars will be ban from 2030: Britain big move on Automobile sector

petrol and diesel cars will be ban from 2030: Britain big move on Automobile sector
Story first published: Sunday, November 15, 2020, 12:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X