பிரதமர் மோடி தலைமையிலாண மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களின் மீது தலா 2 ரூபாய் கலால் வரியை உயர்த்தியுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு, நாட்டின் எரிபொருள் சந்தையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருட கணக்கில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருக்கும் வேளையில், மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை அதிகமாக இருப்பது பெரும் சுமையாக பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசு எரிபொருள் மீதான வரியை உயர்த்தியுள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இன்றைய வர்த்தகத்தில் WTI கச்சா எண்ணெய், பிரெண்ட் கச்சா எண்ணெய் என அனைத்தும் சரிந்திருந்திருக்கும் வேளையில் எரிபொருள் மீதான கலால் வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று 85.53 ரூபாயில் இருந்து 85.86 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.
WTI கச்சா எண்ணெய்-யின் ஜூன் கான்டிராக்ட் விலை ஒரு பேரலுக்கு இம்மாத துவக்கத்தில் 63 டாலருக்கும் அதிகமாக இருந்தது, ஆனால் இன்று 60 டாலராக குறைந்துள்ளது. இதேவேளையில் டிரம்ப் அரசின் வரி விதிப்பின் தாக்கமாக தற்போது இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் விலை உயரும் காரணத்தால் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மறுமுனையில் ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிடப்படும் வேளையில், இக்கூட்டத்தில் நாட்டில் தற்போது நிலவும் பணவீக்கத்தையும், டிரம்ப் வரியால் உருவாகப்போகும் பணவீக்க பாதிப்பையும் குறைக்க ரெப்போ விகிதத்தை சுமார் 0.25 சதவீதம் குறைக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவும் வேளையில், எரிபொருள் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த வரி உயர்வு மூலம் ஏற்படும் வரி உயர்வை மக்கள் தலையில் விழுமா என்பது சந்தேகமாக இருக்கும் வேளையில், தற்போதைய தகவல் படி இந்த கலால் வரி உயர்வை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக்கொண்டு ரீடைல் விலையில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் தற்போதை விலையிலேயே தொடர்ந்து பெட்ரோல், டீசல் விற்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள வேளையில், இதன் மூலம் கிடைக்கும் கூடுதல் லாபத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து வரியாக வசூல் செய்யும் முயற்சி தான் இந்த கலால் வரி உயர்வு. இதனால் சாமானிய மக்களுக்கு எவ்விதமான பாதிப்பும் இருக்காது. இதை மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் 2021 ஏப்ரல்-க்கு பின்பு WTI 59.77 டாலர், பிரெண்ட் கச்சா எண்ணெய் 63.35 டாலர் அளவில் குறைந்துள்ளது. இதுவே இந்தியாவில் பார்த்தால் மே 22, 2022 முதல் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மார்ச் 14ஆம் தேதி கடைசியாக குறைக்கப்பட்டது.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications