மீண்டும் விலை உயர்வு.. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 105.13 ரூபாய்..!

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் இன்றும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 35 பைசா அதிகரித்து மக்களுக்குக் கூடுதல் சுமையைக் கொடுத்துள்ளது.

இந்த நிலை மாற மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சகம் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.

பெட்ரோலியம் துறை அமைச்சகம்

பெட்ரோலியம் துறை அமைச்சகம்

மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சகம் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளிடம் கச்சா எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்கவும், விற்பனை விலையைக் குறைக்கவும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.

OPEC அமைப்பு

OPEC அமைப்பு

ஆனால் OPEC அமைப்பு சில வாரங்கள் முன்பு தான் உற்பத்தி அளவீடுகள் நிர்ணயம் செய்யும் கூட்டத்தில் உற்பத்தியை நவம்பர் மாதம் வரையில் அதிகரிக்கக் கூடாது என்ற முடிவை எடுத்தது. இந்த நிலையில் மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை பலன் அளிக்காது.

அதிகப்படியான வரி

அதிகப்படியான வரி

இதேபோல் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கக் கச்சா எண்ணெய் விலை மட்டும் காரணம் இல்லை, மத்திய அரசு இதன் மீது விதிக்கும் வரியும் காரணம். ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை விலையில் 53.5 சதவீதம் வரி, இதேபோல் டீசல் விற்பனை விலையில் 47.6 சதவீதம். இது டெல்லி நிலவரம் மகாராஷ்டிரா மாநிலத்தில் வரி அளவீடுகள் சற்று அதிகமாகவே இருக்கும்.

சென்னை

சென்னை

இந்நிலையில் இன்றைய விலை உயர்வின் மூலம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 105.13 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு மூலம் அனைத்து உற்பத்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

பெட்ரோல் விலை (Oct 28)

பெட்ரோல் விலை (Oct 28)

சென்னை - 105.13 ரூபாய், டெல்லி - 108.29 ரூபாய், கொல்கத்தா - 108.78 ரூபாய், மும்பை - 114.14 ரூபாய், பெங்களூர் - 112.06 ரூபாய், ஹைதராபாத் - 112.64 ரூபாய், கோழிக்கோடு - 108.77 ரூபாய், போபால் - 116.98 ரூபாய், இந்தூர்- 117.02 ரூபாய்.

டீசல் விலை (Oct 28)

டீசல் விலை (Oct 28)

சென்னை - 101.25 ரூபாய், டெல்லி - 97.02 ரூபாய், கொல்கத்தா - 100.14 ரூபாய், மும்பை - 105.12 ரூபாய், பெங்களூர் - 102.98 ரூபாய், ஹைதராபாத் - 105.84 ரூபாய், கோழிக்கோடு - 102.61 ரூபாய்.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் சந்தையில் இன்று WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 1.69 சதவீதம் சரிந்து 81.26 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.87 சதவீதம் சரிந்து 83.00 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. 

 கச்சா எண்ணெய் விலை 1 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் தற்போது இருக்கும் உயர்வான விலையில் தான் விற்பனை செய்யப்படும். இது மத்திய அரசுக்கும், கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கும் மத்தியில் இருக்கும் ஒரு புரிதல்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+