இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், மாநில அரசுகளும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு ஏதுவாக லாக்டவுன் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகிறது.
இந்த நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் நாட்டின் வளர்ச்சி இது தடையாக அமைந்துள்ளது.
ஒன்றிய அரசு வரி வருமானம்
ஒன்றிய அரசுக்கு ஒவ்வொரு மாதமும் பெரும் பகுதி வரி வருமானம் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் வரும் காரணத்தால் தொடர்ந்து இதன் விலையை உயர்த்தி வருமானம் பார்த்து வருகிறது.
பொருளாதார வளர்ச்சி
நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல விலைவாசி மற்றும் பணவீக்கத்தைக் கட்டாயம் குறைக்க வேண்டும், இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புச் செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி கோரிக்கை வைத்துள்ள நிலையிலும், பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.
போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு
நாட்டின் உற்பத்தித் துறை முதல் சேவைத் துறை வரையில் அனைத்திலும் போக்குவரத்து இல்லாமல் இயங்க முடியாது, இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயரும் போது அனைத்து பணிகளின் செலவுகளும் அதிகரிக்க வேண்டியுள்ளது. இதன் எதிரொலியாகத் தற்போது பால் விலை முதல் கார் விலை வரையில் அனைத்தும் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இன்றைய சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 0.15 சதவீதம் உயர்ந்து 73.48 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.04 சதவீதம் உயர்ந்து 74.56 டாலருக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு
இந்நிலையில் இன்று மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 35 பைசாவும், டீசல் விலை 17 பைசா வரையிலும் அதிகரித்துள்ளது.
35 முறை விலை உயர்வு
5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு மே 4ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை சுமார் 35 முறை அதிகரித்துச் சாதனை படைத்துள்ளது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள். இந்நிலையில் இன்று இந்தியாவின் முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை என்ன என்பதை இப்போது பார்ப்போம்..!
பெட்ரோல் விலை நிலவரம்
இன்றைய விலை உயர்வின் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நிலவரம்
சென்னை : 101.06 ரூபாய்
டெல்லி : 100.21 ரூபாய்
கொல்கத்தா : 100.23 ரூபாய்
மும்பை : 106.25 ரூபாய்
பெங்களூர் : 103.56 ரூபாய்
ஹைதராபாத் : 104.14 ரூபாய்
கோழிக்கோடு : 100.62 ரூபாய்
டீசல் விலை நிலவரம்
இன்றைய விலை உயர்வின் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒரு லிட்டர் டீசல் விலை நிலவரம்
சென்னை : 94.06 ரூபாய்
டெல்லி : 89.53 ரூபாய்
கொல்கத்தா : 92.50 ரூபாய்
மும்பை : 97.09 ரூபாய்
பெங்களூர் : 94.89 ரூபாய்
ஹைதராபாத் : 97.58 ரூபாய்
கோழிக்கோடு : 94.65 ரூபாய்
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications