நடிகரும் தேமுதிக தலைவருமான மறைந்த விஜயகாந்த் தான் ஆட்சிக்கு வந்தால் வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்களைத் தருவதாக கூறினார். இதெல்லாம் ஆகக் கூடிய காரியமா என்று அப்போது அதை பல அரசியல் கட்சிகள் கேலி செய்தன.
இப்போது பிக்பாஸ்கெட், ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் பலசரக்கு, காய்கறி, இறைச்சி போன்ற பொருட்களை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்கின்றன. லேட்டஸ்ட்டாக இப்போது இந்தியாவில் டோர் டு டோர் பெட்ரோல், டீசலை டெலிவரி செய்யும் வசதி அறிமுகமாக உள்ளது.

பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் புதிய ஹிட் அண்ட் ரன் சட்டங்களுக்கு எதிராக டிரக் ஓட்டுநர்கள் அண்மையில் போராட்டம் செய்தனர். இதனால் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள் பதற்றத்துடன் பெட்ரோல் பங்குகளுக்குச் சென்று தங்களது வாகன எரிபொருள் டேங்கை நிரப்பிக் கொண்டனர்.
பெரிய நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடந்ததைப் பார்க்க முடிந்தது. இதுபோன்ற நிலையில் டோர் டு டோர் பெட்ரோல் மற்றம் டீசல் டெலிவரி லாபகரமான தொழிலாகத் தோன்றுகிறது.

நீங்கள் நீண்டதொரு பயணம் செல்வதாக இருந்தாலோ அல்லது எரிபொருள் காலியாகி நடுவழியில் மாட்டிக் கொண்டாலோ இதுபோன்ற டெலிவரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எரிபொருள் டெலிவரி ஆப்கள் இந்தியாவில் அதிகளவில் இல்லை. அதே வேளையில் கமர்ஷியல் வாகனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசலை டோர் டெலிவரி செய்வதற்கான லைசென்ஸ் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
எரிபொருள் டெலிவரி சந்தை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. நிறைய ஸ்டார்ட்அப் கம்பெனிகள் இந்த ஐடியாவை பின்பற்றத் தொடங்கி விட்டன.
ஆன்லைன் மூலம் டோர் டு டோர் பெட்ரோல் மற்றும் டீசல் டெலிவரி எப்படி நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.
இந்தியாவில் எரிபொருள் டெலிவரி ஆப்கள் எரிபொருளை டெலிவரி செய்வதற்கான அனுமதி பெறுவதற்கு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் தனிநபர்கள் மற்றும் பதிவு செய்யப்படாத உரிமையாளர்கள் இந்தியாவில் எரிபொருளை எடுத்துச் செல்வதற்கோ, டெலிவரி செய்வதற்கோ அனுமதி கிடையாது.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நீங்கள் விரும்பும் ஆப்பில் உங்களது இருப்பிடம், தேவையான எரிபொருள், விலையை உறுதி செய்ய வேண்டும். இதுவரை டோர்ஸ்டெப் டெலிவரி பெரிய மெட்ரோ நகரங்களில் மட்டும் செயல்பட்டு வருகிறது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் Fuel@Call மூலம் தொழில் மற்றும் கமர்ஷியல் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் டெலிவரி செய்கிறது.
ஸ்டார்ட்அப் கம்பெனிகளான FuelBuddy, Hamsafar, PepFuels, Repos Energy ஆகியவை இப்போது இந்தியாவில் தில்லி, மும்பை, பெங்களூரு ஆகிய பெருநகரங்களில் டெலிவரி செய்கின்றன.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!



Click it and Unblock the Notifications