கிரிப்டோகரன்சி, பெட்ரோல் விலை, வரி விதிப்பு போன்ற பல விஷயங்களுக்கு மக்கள் அரசின் நிலைப்பாடு தெரியாமல் குழம்பிக்கொண்டு இருந்த வேளையில், நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். இவரது பதில்கள் சாமானிய மக்களைத் தாண்டி முதலீட்டாளர்களுக்கும் தெளிவான கண்ணோட்டத்தைக் கொடுத்துள்ளது.
கிரிப்டோகரன்சி
பிட்காயின் மதிப்பு மீண்டும் 45,000 டாலரை தொட்டு உள்ள நிலையில் சர்வதேச முதலீட்டாளர்களைப் போலவே இந்திய முதலீட்டாளர்களும் கிரிப்டோ சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வரும் இதே வேளையில் தான் சீனாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகம், உற்பத்தி, சேவை என அனைத்தும் முடக்கப்பட்டு நாளுக்கு நாள் விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி 2018ல் இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கிரிப்டோகரன்சி சார்ந்த சேவைகளை வழங்கக் கூடாது என வெளியிட்டது. இந்த உத்தரவை மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் நீக்கி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்குக் கிரிப்டோ வர்த்தகம் சார்ந்த சேவைகளை அளிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட கிரிப்டோகரன்சி குறித்த மசோதா இறுதிக்கட்ட ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது, ஒப்புதல் பெற்ற உடன் நடைமுறைப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பின்னோக்கி வரிவிதிப்பு
கெய்ரன் எனர்ஜி, வோடபோன் ஆகிய நிறுவனத்தின் மீது வரி கோரப்பட்ட Retrospective taxation அதாவது பின்னோக்கி வரிவிதிப்பு விதிகளை நீக்க விரைவில் புதிய கட்டமைப்புக் கொண்டு வரப்பட உள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பின்னோக்கி வரிவிதிப்பு விதிகள் மூலம் இந்தியாவில் இருக்கும் சொத்துக்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உரிமை மாறும் போது வரித்துறை 50 வருடங்களுக்கு முன் சென்று கேப்பிடல் கெயின் வரியை விதிக்க முடியும். இந்த வரிச் சட்டத்தை நீக்கக் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
வருமான வரித் தளத்தில் கோளாறு
சாமானிய மக்கள் மத்தியிலும் மாத சம்பளக்காரர்களுக்கும் தற்போது பெரும் தலைவலியாக இருக்கும் வருமான வரித் தளத்தில் இருக்கும் கோளாறுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
புதிய வருமான வரித் தளத்தில் இருக்கும் கோளாறுகள் மற்றும் பிரச்சனைகள் அடுத்த சில நாட்களில் பெருமளவில் தீர்க்கப்படும், இதன் மூலம் வருமான வரித் தளம் எவ்விதமான பிரச்சனையுமின்றி இயங்கும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வருமான வரித் தளத்தில் இருக்கும் கோளாறுகள் மற்றும் பிரச்சனைகள் குறித்துத் தொடர்ந்து இத்தளத்தைக் கட்டமைத்த இன்போசிஸ் நிறுவனத்திடம் அறிவுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய வருமான வரி தளமான www.incometax.gov.in ஜூலை 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இத்தளம் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் குறைந்துள்ள போதிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாமல் தொடர்ந்து அதிகப்படியான விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் சுமார் 31 நாட்கள் பெட்ரோல், டீசல் விலையை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 3 ரூபாய் வரிக் குறைப்பு மத்திய அரசுக்குக் கடுமையாக நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
இந்த வேளையில் நாடாளுமன்றத்தில் எழுந்துள்ள கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க எவ்விதமான திட்டமும் இல்லை.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் மீதான விலையை மற்றும் வரியைக் குறைக்க முடியாமல் இருக்கும் நிலைக்கு முன்னாள் அரசு கொடுத்துள்ள எண்ணெய் பத்திரங்களும் அதன் மீதான வட்டியும் தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம்
நாட்டின் பணவீக்கம் அரசு மற்றும் ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்யப்பட்ட 2-6 சதவீத அளவீட்டில் தொடர்ந்து பயணிக்கும்.
ஜூன் மாதத்தில் இருந்த 6.26 சதவீத பணவீக்கம் ஜூலை மாதத்தில் 5.59 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பொருளாதாரம்
மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வருகிற பண்டிகை காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்பதில் தான் மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இதைத் தொடர்ந்து வருகிற மாதத்தில் நாட்டின் வர்த்தகம் மற்றும் வருமானம் அதிகரிக்கும், இதனால் அரசின் ஜிஎஸ்டி வரி வசூல் எண்ணிக்கையும் பெரிய அளவில் உயரும் எனத் தெரிவித்துள்ளார்.
மோடியின் ஒன்றிய அரசு
மோடியின் மத்திய அரசு மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டில் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் கலால் வரி மூலம் சுமார் 3.35 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. இது கடந்த வருடத்தை விடவும் 88 சதவீதம் அதிகமாகும்.
கலால் வரி வருமானம்
கடந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்த காரணத்தால் கலால் வரி மூலம் கிடைக்கும் வருமானம் என்பது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19.98 ரூபாயில் இருந்து 32.9 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் டீசலுக்கு 15.83 ரூபாயில் இருந்து 31.8 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ரூ. 3.35 லட்சம் கோடி வருமானம்
இதனால் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி விதிப்பு மூலம் ஏப்ரல் 2020 முதல் மார்ச் 2021 வரையில் சுமார் 3.35 லட்சம் கோடி ரூபாய் வரி வருமானத்தை மத்திய அரசு பெற்று, 88 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது.
More From GoodReturns

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications