மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் எண்ணெய் நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை பெட்ரோல் பம்ப் டீலர்களுக்கு செலுத்தும் கமிஷனை உயர்த்தியுள்ளன. இதனால் ரீடைல் சந்தையில் விற்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்பதையும் உறுதி செய்துள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் (IOC) வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வழக்கொன்று தீர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, டீலர்-களுக்கான கமிஷன் தொகை திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வாங்கும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது" என்று தெரிவித்துள்ளது.

இந்த கமிஷன் தொகை எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தில் இருந்து அளிக்கப்படுவதால் ரீடைல் விலையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது. இதனால் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
மேலும் டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் விற்பனை மற்றும் இடத்தைப் பொறுத்து மாறுபடும். இருப்பினும், இது குறித்த விரிவான தகவல்களை எண்ணெய் நிறுவனங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.
தற்போது, டீலர்களுக்கு பெட்ரோலுக்கு ஒகு கிலோ லிட்டருக்கு அதாவது 1000 லிட்டருக்கு ரூ.1,868.14 மற்றும் 0.875 சதவீத உற்பத்தி விலை கமிஷனும், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.1,389.35 மற்றும் 0.28 சதவீத உற்பத்தி விலை கமிஷனும் வழங்கப்படுகிறது.
தற்போது அதிகரிக்கப்பட்டு உள்ள கமிஷன் தொகை மூலம் சில்லறை விற்பனை நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலன் மற்றும் வாடிக்கையாளர் சேவை தரநிலைகளை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி இதுகுறித்து கூறுகையில், மாநிலங்களுக்குள்ளான போக்குவரத்து கட்டணத்தை ஒழுங்குபடுத்துவது மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் டெப்போக்களிலிருந்து தொலைவில் உள்ள இடங்களில் வசிக்கும் நுகர்வோருக்கு பயனளிக்கும், இதன் விளைவாக நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹர்தீப் சிங் பூரி ட்விட்டரில் செய்த பதிவின் பிடி இனி ஒடிசாவின் குனன்பாளி மற்றும் கலிமெலாவில் பெட்ரோல் விலை ரூ.4.69 மற்றும் ரூ.4.55 முறையே குறையும், டீசல் விலை ரூ.4.45 மற்றும் ரூ.4.32 முறையே குறையும் என்று எடுத்துக்காட்டாக கூறினார்.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications