இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு நாளும் மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் மார்கெட்டிங் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில் இன்று நாட்டின் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையில் கணிசமான மாற்றம் பதிவாகியுள்ளது.
நாட்டின் நான்கு மெட்ரோ நகரங்களின் விலை நிலவரத்தை பார்க்கும் போது டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலையாக எவ்விதமான மாற்றமும் இல்லாமல் உள்ளது,

அதேசமயம் சென்னையில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 11 பைசாவும், டீசல் விலை 9 பைசாவும் குறைந்துள்ளது, தற்போதைய விலை லிட்டருக்கு ரூ.102.63 மற்றும் ரூ.94.23 ஆக உள்ளது. ஆகஸ்ட் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை 11 பைசா உயர்ந்த நிலையில் இன்று குறைந்து பழைய விலைக்கே வந்துள்ளது.
இதேபோல் டீசல் விலையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி 29 பைசாவும், 22 ஆம் தேதி 0.02 பைசாவும் உயர்ந்த நிலையில், 23 ஆம் தேதி எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 95.52 ரூபாய் விலையில் உள்ளது டீசல்.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நகரங்களின் பட்டியலில் முதல் நகரமாக ஆக்ரா- பெட்ரோல் விலை 45 பைசா விலை உயர்ந்து ரூ.96.63க்கும், டீசல் 44 பைசா குறைந்து லிட்டருக்கு ரூ.89.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் குருகிராம் - பெட்ரோல் விலை 33 பைசா விலை உயர்ந்து ரூ 96.99 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 89.76 ஆகவும் 17 பைசா விற்கப்படுகிறது.
லக்னோ- பெட்ரோல் 17 பைசா விலை உயர்ந்து ரூ.96.74க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.89.93க்கும் 17 பைசா விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் ஜெய்ப்பூர்- பெட்ரோல் 7 பைசா விலை உயர்ந்து ரூ.108.85க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.93.72க்கும் 7 பைசா விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பாட்னா - பெட்ரோல் 7 பைசா விலை உயர்ந்து ரூ.107.54 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.32 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நகரங்களின் பட்டியலில் அகமதாபாத் முதல் நகரமாக பெட்ரோல் 20 பைசா குறைந்து ரூ.96.42க்கும், டீசல் 21 பைசா குறைந்து லிட்டருக்கு ரூ.92.17க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அஜ்மீர் - பெட்ரோல் 34 பைசா குறைந்த விலையில் ரூ.108.54க்கும், டீசல் 31 பைசா குறைந்த விலையில் லிட்டருக்கு ரூ.93.78க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் நொய்டா - பெட்ரோல் 17 பைசா குறைந்த விலையில் ரூ.96.59க்கும், டீசல் 17 பைசா குறைந்து லிட்டருக்கு ரூ.89.76க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள் நகரத்தில் எரிபொருள் விலையை தினமும் செக் செய்ய எளிய வழி உள்ளது. வாடிக்கையாளர்களாகிய மக்கள் தங்கள் தங்கியிருக்கும் நகரங்கள் அல்லது விருப்பமான நகரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எளிதாக சரிபார்க்கலாம்.
நீங்கள் ஒரு SMS அனுப்ப வேண்டும். BPCL வாடிக்கையாளர்களுக்கு, 9223112222 என்ற எண்ணிற்கு மற்றும் HPCL வாடிக்கையாளர்களுக்கு HPPRICE என்று 9222201122 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.
மறுபுறம், நீங்கள் இந்தியன் ஆயில் வாடிக்கையாளராக இருந்தால், எரிபொருளின் விலையை அறிய RSP மற்றும் 9224992249 என்ற எண்ணிற்கு செய்தி அனுப்பவும். அதன் பிறகு, சில நிமிடங்களில் சமீபத்திய கட்டணங்கள் பற்றிய தகவலைப் பெறுவீர்கள்.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!



Click it and Unblock the Notifications