பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. சென்னை, கோவை, மும்பை, பெங்களூரில் இன்றைய விலை நிலவரம் என்ன..?!

ஒருபக்கம் பொதுத்தேர்தல் கூட்டணி அறிவிப்புகள், மறுபுறம் தேர்தல் பத்திரம் குறித்த அறிவிப்புகள் எப்படி ஒட்டுமொத்த நாடும், நாட்டு மக்களும் பரபரப்பாக இருக்கும் வேலையில், சாமானிய மக்களுக்கு சுமார் 663 நாட்களுக்குப் பின்பு மத்திய அரசு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

மத்திய அரசு ரஷ்யாவில் இருந்து தள்ளுபடி விலையில் வாங்கிய கச்சா எண்ணெய் மூலம் அதிகப்படியான லாபத்தைப் பெற்றிருந்தாலும், வெனிசூலா கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வந்த பின்னர், கடந்த 2 மாதமாக ரஷ்யா எண்ணெய் வாங்குவதைப் பெரிய அளவில் குறைத்துள்ளது. இந்த வேளையில் பெட்ரோல் டீசல் விலையை 2 ரூபாய் குறைந்துள்ளது மிக முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. சென்னை, கோவை, மும்பை, பெங்களூரில் இன்றைய விலை நிலவரம் என்ன..?!

மத்திய அரசு நடப்பு நிதியாண்டுக்கான நிதியியல் பற்றாக்குறை அளவீட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் 5.9 சதவீதத்தைத் திருத்தி 5.8 சதவீதமாகக் குறைத்தது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு நாட்டின் மொத்த ஜிடிபி-யில் 6.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 81.38 டாலர், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 85.48 டாலர். ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் வாங்கிய கச்சா எண்ணெய் நிறுத்தப்பட்டு 2 மாதங்களானது.

இந்த நிலையிலும் நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் 15 நாட்கள் மட்டுமே இருக்கும் வேலையில் பெட்ரோல், டீசல் விலை 663 நாட்களுக்குப் பின்பு இந்தியா முழுவதும் எவ்விதமான பாகுபாடுமின்றி லிட்டருக்கு 2 ரூபாய் குறைந்துள்ளது. இந்த விலை நிலவரம் இன்று மார்ச் 15ஆம் தேதி காலை 6 மணி முதல் அமலாக்கம் செய்யப்பட்ட உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. சென்னை, கோவை, மும்பை, பெங்களூரில் இன்றைய விலை நிலவரம் என்ன..?!

இதன் மூலம் நாட்டின் முக்கியமான நகரங்களில் இன்றைய பெட்ரோல், டிசல் விலையைப் பார்ப்போம்.

பெட்ரோல் விலை (மார்ச் 15):

டெல்லி - 94.72 ரூபாய்,
கொல்கத்தா - 103.94 ரூபாய்,
மும்பை - 104.21 ரூபாய்,
சென்னை - 101.18 ரூபாய்,
குர்கான் - 94.98 ரூபாய்,
நொய்டா - 94.66 ரூபாய்,
பெங்களூர் - 99.84 ரூபாய்,
புவனேஸ்வர் - 100.92 ரூபாய்,
சண்டிகர் - 94.24 ரூபாய்,
ஹைதராபாத் - 107.41 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 104.88 ரூபாய்,
லக்னோ - 94.65 ரூபாய்,
பாட்னா - 105.48 ரூபாய்,
திருவனந்தபுரம் - 107.25 ரூபாய்.

டீசல் விலை (மார்ச் 15):

டெல்லி - 87.62 ரூபாய்,
கொல்கத்தா - 90.76 ரூபாய்,
மும்பை - 92.15 ரூபாய்,
சென்னை - 92.76 ரூபாய்,
குர்கான் - 87.85 ரூபாய்,
நொய்டா - 87.76 ரூபாய்,
பெங்களூர் - 85.93 ரூபாய்,
புவனேஸ்வர் - 92.5 ரூபாய்,
சண்டிகர் - 82.4 ரூபாய்,
ஹைதராபாத் - 95.65 ரூபாய்,
ஜெய்ப்பூர் - 90.36 ரூபாய்,
லக்னோ - 87.76 ரூபாய்,
பாட்னா - 92.32 ரூபாய்,
திருவனந்தபுரம் - 96.13 ரூபாய்.

பெட்ரோல் விலை மாநிலங்கள் வாரியாக (மார்ச் 15):

அந்தமான் நிக்கோபார் - 82.42 ரூபாய்,
ஆந்திரப் பிரதேசம் - 109.31 ரூபாய்,
அருணாச்சல பிரதேசம் - 90.62 ரூபாய்,
அசாம் - 96.17 ரூபாய்,
பீகார் - 105.48 ரூபாய்,
சண்டிகர் - 94.24 ரூபாய்,
சத்தீஸ்கர் - 100.39 ரூபாய்,
தாத்ரா நாகர்ஹவேலி - 92.51 ரூபாய்,
டாமன் டையூ - 92.39 ரூபாய்,
டெல்லி - 94.72 ரூபாய்,
கோவா - 95.34 ரூபாய்,
குஜராத் - 94.57 ரூபாய்,
ஹரியானா - 95.5 ரூபாய்,
ஹிமாச்சல பிரதேசம் - 95.24 ரூபாய்,
ஜம்மு காஷ்மீர் - 95.43 ரூபாய்,
ஜார்கண்ட் - 97.81 ரூபாய்,
கர்நாடகா - 99.84 ரூபாய்,
கேரளா - 107.25 ரூபாய்,
மத்திய பிரதேசம் - 106.31 ரூபாய்,
மகாராஷ்டிரா - 104.21 ரூபாய்,
மணிப்பூர் - 99.21 ரூபாய்,
மேகாலயா - 96.26 ரூபாய்,
மிசோரம் - 93.7 ரூபாய்,
நாகாலாந்து - 96.47 ரூபாய்,
ஒடிசா - 100.92 ரூபாய்,
பாண்டிச்சேரி - 94.21 ரூபாய்,
பஞ்சாப் - 96.81 ரூபாய்,
ராஜஸ்தான் - 104.88 ரூபாய்,
சிக்கிம் - 100.7 ரூபாய்,
தமிழ்நாடு - 101.18 ரூபாய்,
தெலுங்கானா - 107.41 ரூபாய்,
திரிபுரா - 97.47 ரூபாய்,
உத்தரப்பிரதேசம் - 94.65 ரூபாய்,
உத்தரகாண்ட் - 93.11 ரூபாய்,
மேற்கு வங்காளம் - 103.94 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+