தேர்தல் நெருங்க நெருங்க... 2வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலை சரிவு.. மக்களுக்கு ஐஸ்!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் 5 மாநில தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளில் இருந்து சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படாமல் நிலைபெற்று இருந்தது.

இந்நிலையில் தேர்தல் நாழ் நெருங்கி வரும் வேளையில் இந்தியாவில் தற்போது பெட்ரோல் டீசல் விலை 2வது நாளாகக் குறைந்து வருகிறது. இது சற்றும் எதிர்பார்க்காத நிகழ்வு என்பதால் மக்கள் அதிர்ச்சி கலந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை சரிவு

பெட்ரோல் மற்றும் டீசல் விலை சரிவு

இந்நிலையில் வியாழக்கிழமை ரீடைல் விற்பனை சந்தையில் 2வது நாளாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 18-21 பைசா வரையில் குறைந்துள்ளது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் விலை 19-22 பைசா வரையில் குறைந்துள்ளது.

5 மாநில தேர்தல்

5 மாநில தேர்தல்

ரீடைல் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல்-ன் விற்பனை விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் மூலம் தேர்தல் நடக்கும் 5 மாநிலத்தில் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிலும் இன்று 2வது நாளாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளது.

டெல்லி விலை நிலவரம்

டெல்லி விலை நிலவரம்

இதன் மூலம் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று 90.99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 21 பைசா விலை குறைந்து 90.78 ரூபாயாகக் குறைந்துள்ளது. இதேவேளையில் டீசல் விலை 81.30 ரூபாயில் இருந்து 81.10 ரூபாய்க்கு குறைந்துள்ளது.

சென்னை விலை நிலவரம்

சென்னை விலை நிலவரம்

இதேவேளையில் நம்ம சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 18 பைசா குறைந்து 92.77 ரூபாயாகக் குறைந்துள்ளது, மேலும் ஒரு லிட்டர் டீசல் 19 பைசா குறைந்து 86.10 ரூபாயாகக் குறைந்துள்ளது. தற்போது ஏற்பட்டு உள்ள விலை சரிவின் உற்பத்தி பொருட்களில் இருந்து விலை உயர்வு அபாயம் சற்று தணிந்துள்ளது என்றால் மிகையில்லை.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை சரிவுக்கு முக்கியக் காரணம் சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றம் தான். கடந்த சில நாட்களாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

சர்வதேசச் சந்தை விலை

சர்வதேசச் சந்தை விலை

குறிப்பாகக் கடந்த வருடம் 70 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட பிரென்ட் கச்சா எண்ணெய் படிப்படியாகச் சரிந்து தற்போது 63.54 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் WTI கச்சா எண்ணெய் 60.19 டாலருக்கு, OPEC கச்சா எண்ணெய் 62.27 டாலருக்கும், இந்திய பேஸ்கட் கச்சா எண்ணெய் 62.71 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

இந்தியாவில் தினமும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் விற்பனை நிறுவனமான பார்த் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் விற்பனை விலையை நிர்ணயம் செய்கிறது.

மதிப்பு கூட்டு வரி அளவீடு

மதிப்பு கூட்டு வரி அளவீடு

இதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் விதிக்கப்படும் மதிப்புக் கூட்டு வரி அளவீடுகள் மாறுபடும் காரணத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறுபடுகிறது. இதன் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் டெல்லியில் 90.78 ரூபாய்க்கும், மும்பையில் 97.19 ரூபாய்க்கும், சென்னையில் 92.77 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 90.98 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+