காங்கிரஸ் செய்ததை பாஜக-வால் எப்போதும் செய்ய முடியாது..?!! மக்கள் தான் பாவம்..!

இந்திய பொருளாதாரத்திற்குக் கொரோனா தொற்று எந்த அளவிற்குச் சுமையாக இருக்கிறதோ அதே அளவிற்குப் பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத் தடையாக உள்ளது.

சாமானிய மக்கள் தினசரி பயன்படுத்தும் போக்குவரத்து, உணவு பொருட்கள், உற்பத்தி பொருட்களின் விலை என அனைத்திலும் பெட்ரோல், டீசல் விலை முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.

ஆனாலும் மத்திய அரசு தனது வரி வசூல் அளவீட்டை மேம்படுத்தும் விதமாகப் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

பாஜக அரசு செய்தது

பாஜக அரசு செய்தது

அந்த வகையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்துக் கடுமையாக விமர்சனம் செய்து ஆட்சிக்கு வந்த பாஜக அரசு 2014ஆம் நிதியாண்டில் பெட்ரோலியம் பொருட்கள் மீது இருந்த 4.9 சதவீத கலால் வரியை 2021ஆம் நிதியாண்டில் 25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

கலால் வரி 5 மடங்கு வளர்ச்சி

கலால் வரி 5 மடங்கு வளர்ச்சி

இதன் மூலம் பாஜக அரசு கடந்த 7 வருடத்தில் அதாவது 2014 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் மட்டும் பெட்ரோலியம் பொருட்கள் மீதான கலால் வரியை 5 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தத் தடாலடி உயர்வால் போக்குவரத்துக் கட்டணம் மிகப்பெரிய அளவில் அதிகரித்து உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

கலால் வரியைக் குறைத்த UPA அரசு

கலால் வரியைக் குறைத்த UPA அரசு

ஆனால் UPA அரசு தன் ஆட்சி காலத்தில் இருந்த போது 2004ஆம் நிதியாண்டில் பெட்ரோலியம் பொருட்கள் மீதான கலால் வரியை 12.6 சதவீதத்தில் இருந்து 2014ஆம் நிதியாண்டில் படிப்படியாக 4.9 சதவீதமாகக் குறைந்தது எனக் கிருஷ்ண காந்த் என்பவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இக்காலகட்டத்தில் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரமும் வளர்ச்சி அடைந்தது.

 பாஜகவால் இதைச் செய்ய முடியுமா..?

பாஜகவால் இதைச் செய்ய முடியுமா..?

இப்போ சொல்லுங்க காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு செய்து போல் பாஜக அரசு ஆட்சியில் இருக்கும் போதே பெட்ரோலியம் பொருட்கள் மீதான கலால் வரியை 25 சதவீதத்தில் இருந்து 4.9 சதவீதமாகக் குறைக்க முடியுமா..?

உங்கள் பதிலை கமெண்ட்-ல் சொலுங்க பாஸ்..!

 

மத்திய அரசின் கலால் வரி வருமானம்

மத்திய அரசின் கலால் வரி வருமானம்

மே 16ஆம் தேதி நிலவரத்தின் படி மத்திய அரசு 92.58 ரூபாய் விற்பனை விலை கொண்ட பெட்ரோல் மூலம் கலால் வரியாக மட்டுமே 32.90 ரூபாயைப் பெறுகிறது. இதேபோல் 83.22 ரூபாய் விற்பனை விலை கொண்ட டீசல் மூலம் கலால் வரியாக 31.80 ரூபாய் வரி வருமானமாகப் பெறுகிறது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இன்றைய பெட்ரோல், டீசல் விலை உயர்வு

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 28-29 பைசாவும், ஒரு லீட்டர் டீசலுக்கு 26-28 பைசாவும் உயர்த்தியுள்ளது.

17 முறை விலை உயர்வு

17 முறை விலை உயர்வு

இன்றைய விலை உயர்வின் மூலம் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.47 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு மே 4ஆம் தேதி துவங்கி மே மாதத்தில் மட்டும் சுமார் 17 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்

  • சென்னை: 95.76ரூபாய்
  • டெல்லி: 94.23ரூபாய்
  • கொல்கத்தா: 94.25ரூபாய்
  • மும்பை: 100.47ரூபாய்
  • போபால்: 102.34ரூபாய்
  • பெங்களூர்: 97.37ரூபாய்
  • ஹைதராபாத்: 97.93ரூபாய்
  • கோழிக்கோடு: 94.64ரூபாய்
இன்றைய டீசல் விலை நிலவரம்

இன்றைய டீசல் விலை நிலவரம்

  • சென்னை: 89.90ரூபாய்
  • டெல்லி: 85.15ரூபாய்
  • கொல்கத்தா: 88.00ரூபாய்
  • மும்பை: 92.45ரூபாய்
  • போபால்: 93.65ரூபாய்
  • பெங்களூர்: 90.27ரூபாய்
  • ஹைதராபாத்: 92.83ரூபாய்
  • கோழிக்கோடு: 90.05ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+