சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் 4 நாட்களாகத் தொடர்ந்து விலையை உயர்த்தி வந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று விலையில் எவ்விதமான மாற்றமும் செய்யவில்லை. இதனால் நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது.
ஆனாலும் பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் தனது வரலாற்று உச்ச அளவில் விற்பனை செய்து வரும் காரணத்தால் மக்களுக்குத் தொடர்ந்து பாதிப்பு தான்.
தொடர் உயர்வு
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 வருட உச்சத்தைத் தொட்ட காரணத்தால் இந்தியாவில் அனைத்து எரிபொருள் விலையும் உயர்த்த துவங்கியது. இதோடு எரிவாயு விலையும் அதிகரிக்கத் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் 110 ரூபாய்
இதன் மூலம் கடந்த 10 நாட்களில் அரசு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாயும் உயர்த்தியுள்ளது. இதன் மூலம் போபால், இந்தூர் ஆகிய பகுதிகளில் வரலாற்றிலேயே முதல் முறையாகப் பெட்ரோல் விலை 110 ரூபாய்க்கு அதிகமாக உயர்ந்துள்ளது.
அதிகப்படியான வரி விதிப்பு
இந்த அதிகப்படியான விலைக்கு மத்திய அரசு விதிக்கும் அதிகப்படியான வரி தான் காரணம். மாநில அரசு பெட்ரோல், டீசல் விற்பனையில் வரி விதித்தாலும் கடந்த 7 வருடத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாமல் தொடர்ந்து நிலையான வரியை மட்டுமே விதித்து வருகிறது.
மத்திய அரசு
ஆனால் மத்திய அரசு அதிகப்படியான வரியை விதிக்கும் காரணத்தால் கச்சா எண்ணெய் விலை வரலாற்று உச்ச அளவீட்டை விடவும் குறைவாக இருந்தாலும் அதிகப்படியான வரி விதிப்பு மூலம் பெட்ரோல், டீசல் விலை வரலாற்று உச்ச விலையை அடைந்துள்ளது.
OPEC+ அமைப்புக் கூட்டம்
மேலும் இன்று OPEC+ அமைப்பு இன்று முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளது. இக்கூட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு மட்டும் அல்லாமல் அதன் விலை நிர்ணயம் குறித்து முக்கியமான முடிவு எடுக்கப்பட உள்ளது.
சவுதி அரேபியா
சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலை 3 வருட உச்சத்தில் இருக்கும் காரணத்தால் அதிகப்படியான வருமானம் பார்த்து வருகிறது. இதனால் இக்கூட்டத்தின் மூலம் கச்சா எண்ணெய் விலை குறையப்போவது இல்லை.
கச்சா எண்ணெய் விலை
இன்றைய சர்வதேச சந்தை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 0.40 சதவீதம் சரிந்து 75.58 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.30 சதவீதம் சரிந்து 79.04 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
கடந்த 4 நாட்களில் கச்சா எண்ணெய் விலை 1 டாலர் - 1.5 டாலர் வரையில் சரிந்துள்ளது.
பெட்ரோல் விலை
- சென்னை - 100.01 ரூபாய்
- டெல்லி - 102.39 ரூபாய்
- கொல்கத்தா - 103.07 ரூபாய்
- மும்பை - 108.43 ரூபாய்
- பெங்களூர் - 105.95 ரூபாய்
- ஹைதராபாத் - 106.51 ரூபாய்
- கோழிக்கோடு - 102.86 ரூபாய்
- போபால் - 110.92 ரூபாய்
- இந்தூர்- 110.92 ரூபாய்
டீசல் விலை
- சென்னை - 95.31 ரூபாய்
- டெல்லி - 90.77 ரூபாய்
- கொல்கத்தா - 93.87 ரூபாய்
- மும்பை - 98.48 ரூபாய்
- பெங்களூர் - 96.34 ரூபாய்
- ஹைதராபாத் - 99.04 ரூபாய்
- கோழிக்கோடு - 96.03 ரூபாய்
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications