வெடிக்க காத்திருக்கும் பெட்ரோல், டீசல் பிரச்சனை!! வேறு வழி இல்லை என கைவிரிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்!!

இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் வளைகுடா நாடுகளில் இருந்து தான் கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியா தனக்கு தேவையான 100 சதவீத கச்சா எண்னெயை வெளிநாடுகளில் இருந்து தான் கொள்முதல் செய்கிறது.

இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளிடமிருந்து கச்சா எண்ணையை வாங்கி அதனை பெட்ரோல் மற்றும் டீசல் ஆக மாற்றி பொதுமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்கின்றன. பிப்ரவரி 28ஆம் தேதியிலிருந்து இந்தியாவுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வரவில்லை. இதனால் அதிக விலை கொடுத்து ரஷ்யா ,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறது.

வெடிக்க காத்திருக்கும் பெட்ரோல், டீசல் பிரச்சனை!! வேறு வழி இல்லை என கைவிரிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்

வளைகுடா நாடுகளில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய் போல இல்லாமல் ரஷ்யா மற்றும் பிற நாடுகளில் இருந்து வாங்கக்கூடிய கச்சா எண்ணெயை அதிக செலவு செய்து பெட்ரோல் டீசலாக சுத்திகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் இந்தியாவை சேர்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிறுவனங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் கணிசமாக முப்பதாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும் உள்நாட்டில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததுதால் இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 30,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறதாம். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் , பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தற்போதைக்கு இந்த நஷ்டத்தை தாங்களே ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

Also Read

ஒவ்வொரு லிட்டர் டீசல் விற்பனையிலும் 30 ரூபாயும் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனையிலும் 24 ரூபாயும் இந்த நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள் மீதான சுமையை குறைக்கும் பொருட்டு கடந்த மாதம் அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரிகளை குறைத்தது. இதனால் ஓரளவு நஷ்டம் ஈடு செய்யப்பட்டாலும் முழுமையாக அது ஈடு செய்யப்பட முடியவில்லை.

அந்த வகையில் மார்ச் மாதம் முதல் இந்தியாவை சேர்ந்த மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் 30,000 கோடி ரூபாய் இழப்பினை சந்தித்திருக்கின்றன. எனவே நிலைமை இப்படியே சென்றால் வேறு வழி இல்லாமல் பெட்ரோல் டீசல் விலைகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து இன்னும் சீராகவில்லை உடனடியாக இந்த பிரச்சனை தீர்க்கப்பட்டாலும் கப்பல் போக்குவரத்து சீராவதற்கு பல மாதங்கள் ஆகும்.

Recommended For You

கச்சா எண்ணெய் விநியோகம் பழைய நிலைக்கு திரும்புவதற்கு ஒரு வருடத்திற்கு மேலாகும் என சொல்லப்படுகிறது. அதுவரையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் குறையாது. எனவே ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் எண்ணெய் நிறுவனங்களால் நஷ்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கான சாத்தியங்கள் அதிகரிப்பதாகவே சொல்லப்படுகிறது.

ஏற்கனவே ஜப்பான் , பிரிட்டன் , பிரான்ஸ், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலைகள் பல மடங்கு உயர்த்தப்பட்டு விட்டன. ஈரான் போருக்கு முன்பு 69 ரூபாய்க்கு கிடைத்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் தற்போது 150 ரூபாய்க்கு கிடைப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன. பல்வேறு நாடுகளிலும் 20 சதவீதத்திற்கும் மேல் பெட்ரோல் , டீசல் விலைகள் உயர்த்தப்பட்டு விட்ட நிலையில் இந்தியாவில் மட்டும் இன்னும் உயர்த்தாமலே இருக்கிறது.

அந்த வகையில் கூடிய விரைவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தால் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்தும். இது நேரடியாகவே சாமானிய மக்களின் பட்ஜெட்டிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+