110 ரூபாயை தாண்டிய பெட்ரோல் விலை.. பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் எரிபொருள் விலை மிகப்பெரிய சுமையாக இருக்கும் காரணத்தால் அனைத்து முன்னணி உற்பத்தி நிறுவனங்களும் தங்களது உற்பத்தி பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது. இதனால் நாட்டின் வர்த்தகம் பாதிக்கப்படும் என அனைத்து வர்த்தக அமைப்பும் கூறி வரும் நிலையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

ஒரு நாள் லீவ் விட்டு இன்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்துள்ளது கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள். இன்றைய உயர்வின் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத விதமாக 110 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 21 முதல் 25 பைசாவும், டீசல் விலை 28 முதல் 31 பைசா வரையிலும் அதிகரித்துள்ளது.

போபால்

போபால்

இன்றைய உயர்வின் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், போபாலில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 பைசா அதிகரித்து 110.11 ரூபாய் அளவீட்டைத் தொட்டு உள்ளது. இதேபோல் டீசல் விலை 98.77 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலை
 

பெட்ரோல் விலை

  • சென்னை - 99.36 ரூபாய்
  • டெல்லி - 101.64 ரூபாய்
  • கொல்கத்தா - 102.17 ரூபாய்
  • மும்பை - 107.71 ரூபாய்
  • பெங்களூர் - 105.18 ரூபாய்
  • ஹைதராபாத் - 105.74 ரூபாய்
  • கோழிக்கோடு - 102.11 ரூபாய்
  • போபால் - 110.11 ரூபாய்
  • இந்தூர்- 110.15 ரூபாய்

பெட்ரோல் விலை உயர்வு தொடர்ந்தால் அடுத்த 3 நாட்களில் தமிழ்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொட்டுவிடும்.

 

டீசல் விலை

டீசல் விலை

  • சென்னை - 94.45 ரூபாய்
  • டெல்லி - 89.87 ரூபாய்
  • கொல்கத்தா - 92.97 ரூபாய்
  • மும்பை - 97.52 ரூபாய்
  • பெங்களூர் - 95.38 ரூபாய்
  • ஹைதராபாத் - 98.06 ரூபாய்
  • கோழிக்கோடு - 95.08 ரூபாய்
கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இன்று சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 0.11 சதவீதம் வரையில் சரிந்து 74.75 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.31 சதவீதம் வரையில் சரிந்து 78.40 டாலருக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் OPEC மற்றும் இந்திய பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை 80 டாலர் அளவில் குறைந்து வரும் நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Petrol diesel price hiked after a day break; Petrol Price Crosses Rs 110-Mark in Bhopal, indore

Petrol diesel price hiked after a day break; Petrol Price Crosses Rs 110-Mark in Bhopal, indore
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X