பெட்ரோல், டீசல் விலை 3வது நாளாக உயர்வு.. மும்பையில் 110ஐ நெருங்கியது..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை கடந்த 15 நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று கச்சா எண்ணெய் விலை 82 டாலர் வரையில் உயர்ந்த காரணத்தால் இன்று 3வது நாளாகத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 29 முதல் 30 பைசாவும், டீசல் விலை 35 பைசா முதல் 38 பைசா வரையில் உயர்த்தியுள்ளது.

ரீடைல் எரிபொருள் சந்தை

ரீடைல் எரிபொருள் சந்தை

இந்திய ரீடைல் எரிபொருள் சந்தையில் ஆதிக்கம் செய்யும் இந்தியன் ஆயில் கார்பரேஷன், பாரத பெட்ரோலியம் கார்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் ஆகிய 3 நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினசரி பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகிறது.

ரூபாய் மதிப்பு

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 75 ரூபாயை நெருங்கி 6 மாத சரிவை எட்டியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலையும் பல மாத உயர்வைத் தொட்டு உள்ளது. இந்தச் சூழ்நிலையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்துள்ளது.

இன்றைய பெட்ரோல் விலை (Oct 7)

இன்றைய பெட்ரோல் விலை (Oct 7)

சென்னை - 100.75 ரூபாய், டெல்லி - 103.24 ரூபாய், கொல்கத்தா - 103.94 ரூபாய், மும்பை - 109.25 ரூபாய், பெங்களூர் - 106.83 ரூபாய், ஹைதராபாத் - 107.40 ரூபாய், கோழிக்கோடு - 103.71 ரூபாய், போபால் - 111.76 ரூபாய், இந்தூர்- 111.80 ரூபாய்.

இன்றைய டீசல் விலை (Oct 7)

இன்றைய டீசல் விலை (Oct 7)

சென்னை - 96.26 ரூபாய், டெல்லி - 91.77 ரூபாய், கொல்கத்தா - 94.88 ரூபாய், மும்பை - 99.55 ரூபாய், பெங்களூர் - 97.40 ரூபாய், ஹைதராபாத் - 100.13 ரூபாய், கோழிக்கோடு - 97.08 ரூபாய்.

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

கச்சா எண்ணெய் உயர்வால் தான் தற்போது இந்தியாவில் கச்சா பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் விலை 110 டாலருக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட போது கூட இந்தியாவில் பெட்ரோல் விலை 80 ரூபாயைத் தாண்டவில்லை.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை வெறும் 80 டாலர் இருக்கும் நிலையில் பெட்ரோல் விலை 110 ரூபாய்க்கும், டீசல் வலை 98 ரூபாய் அளவிற்கும் உயர்ந்துள்ளது. இதற்கு மிக முக்கியக் காரணம் மத்திய அரசு விதிக்கும் அதிகப்படியான வரி தான் காரணம்.

மத்திய அரசின் வரி

மத்திய அரசின் வரி

பெட்ரோல், டீசல் விலை விற்பனையில் மாநில அரசும் வரியை விதித்தாலும், எரிபொருளின் மொத்த விற்பனை விலையில் மத்திய அரசு வரி விதிப்பின் பங்கு மிகவும் அதிகம் என்றால் மிகையில்லை. மத்திய அரசு தனது வரி விதிப்பை முந்தைய காங்கிரஸ் அரசு விதித்த அளவிற்கு விதித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் 72 முதல் 75 ரூபாய் அளவிற்குக் கிடைக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+