இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை சிறிது சிறிதாக உயர்ந்து மக்கள் தலையில் பெரும் சுமை வைக்கப்பட்டு உள்ளது என்பதை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து விளைபொருட்களுமே விலை உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு வாரத்தில் காய்கறி மற்றும் பழங்களின் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளதை நாம் பார்த்து வருகிறோம். குறிப்பாகத் தக்காளி விலை பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் சாமானிய மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.3
பெட்ரோல் டீசல் விலை
இந்தியாவின் முன்னணி 3 பொதுத்துறை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தொடர்ந்து விலையை உயர்த்தி வருகிறது. மேலும் இந்தியாவில் பெட்ரோல் டீசல் தேவைக்காகக் கச்சா எண்ணெய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வரும் காரணத்தால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பும் இதன் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விலை உயர்வு
இன்று இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 பைசா முதல் 30 பைசா வரையில் உயர்ந்துள்ளது, இதேபோல் டீசல் விலை 33 பைசாவில் இருந்து 37 பைசா வரையில் உயர்ந்துள்ளது. முதலில் 20 முதல் 25 பைசா உயர்ந்து வந்த நிலையில் தற்போது 30 முதல் 35 பைசா வரையில் உயர்த்தப்பட்டு வருகிறது.
இன்றைய பெட்ரோல் விலை (Oct 11)
சென்னை - 101.79 ரூபாய், டெல்லி - 104.44 ரூபாய், கொல்கத்தா - 105.09 ரூபாய், மும்பை - 110.41 ரூபாய், பெங்களூர் - 108.08 ரூபாய், ஹைதராபாத் - 108.64 ரூபாய், கோழிக்கோடு - 104.91 ரூபாய், போபால் - 113.00 ரூபாய், இந்தூர்- 113.04 ரூபாய்.
இன்றைய டீசல் விலை (Oct 11)
சென்னை - 97.59 ரூபாய், டெல்லி - 93.17 ரூபாய், கொல்கத்தா - 96.28 ரூபாய், மும்பை - 101.03 ரூபாய், பெங்களூர் - 98.89 ரூபாய், ஹைதராபாத் - 101.66 ரூபாய், கோழிக்கோடு - 98.56 ரூபாய்.
கச்சா எண்ணெய் விலை
இதேபோல் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 2 சதவீதம் வரையில் உயர்ந்து 80.94 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.63 சதவீதம் வரையில் அதிகரித்து 83.73 டாலராக அதிகரித்துள்ளது.
டாலர் மதிப்பு
மேலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 75.07 ரூபாயாகச் சரிந்துள்ளது. இது கச்சா எண்ணெய் இறக்குமதி விலையில் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. ரூபாய் மதிப்பு சுமார் 4 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் கச்சா எண்ணெய் மற்றும் டாலர் மதிப்பு குறைந்தால் மட்டுமே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையும், இல்லையெனில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்தால் இதன் விலை குறைய அதிக வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications