OPEC அமைப்பு முடிவால் பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.. தமிழ்நாட்டில் ரூ.100.49

உலக நாடுகளில் எரிபொருள் தேவை மிகவும் அதிகமாக இருக்கும் வேளையில் OPEC அமைப்பு நவம்பர் மாதம் தனது முந்தைய இலக்கான ஒரு நாளுக்கு 4, 00, 000 பேரல் அளவிலான கச்சா எண்ணெய் மட்டுமே உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் தாறுமாறாக உயர துவங்கியுள்ளது.

இதனால் இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 2வது நாளாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை தமிழக அரசின் சலுகைக்கு பின்பு மீண்டும் 100 ரூபாய் கடந்துள்ள நிலையில், இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் விலை வரலாற்று உச்ச அளவை தொட்டு உள்ளது.

 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்

மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சர்வதேச விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றை கணக்கிட்டு 2வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 முதல் 30 பைசா வரையிலும், டீசல் லிட்டருக்கு 34 முதல் 37 பைசா வரையில் உயர்ந்துள்ளது. குறிப்பாக OPEC அமைப்பின் முடிவுக்கு பின்பு அறிவிக்கப்பட்டு உள்ள விலை உயர்வு சாமானிய மக்கள் முதல் உற்பத்தி தொழிற்சாலைகள் வரையில் பாதித்துள்ளது.

இன்றைய பெட்ரோல் விலை (Oct 6)

இன்றைய பெட்ரோல் விலை (Oct 6)

சென்னை - 100.49 ரூபாய், டெல்லி - 102.94 ரூபாய், கொல்கத்தா - 103.65 ரூபாய், மும்பை - 108.96 ரூபாய், பெங்களூர் - 106.52 ரூபாய், ஹைதராபாத் - 107.09 ரூபாய், கோழிக்கோடு - 103.41 ரூபாய்,
போபால் - 111.45 ரூபாய், இந்தூர்- 111.49 ரூபாய்.

இன்றைய டீசல் விலை (Oct 6)

இன்றைய டீசல் விலை (Oct 6)

சென்னை - 95.93 ரூபாய், டெல்லி - 91.42 ரூபாய், கொல்கத்தா - 94.53 ரூபாய், மும்பை - 99.17 ரூபாய், பெங்களூர் - 97.03 ரூபாய், ஹைதராபாத் - 99.75 ரூபாய், கோழிக்கோடு - 96.71 ரூபாய்.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

மேலும் சர்வதேச சந்தையில் இன்று WTI கச்சா எண்ணெய் விலை 0.08 சதவீதம் சரிந்து 78.87 டாலர் விலையில் கணிசமான சரிவை பதிவு செய்தாலும். பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.60 சதவீதம் அதிகரித்து 82.56 டாலர் வரையில் உயர்ந்து உலக நாடுகளை பயமுறுத்தியுள்ளது.

இறக்குமதி அதிகம்

இறக்குமதி அதிகம்

இந்தியாவில் 90 சதவீத எரிபொருள் தேவையை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காரணத்தால் சர்வதேச விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் ஆகியவற்றை அடிப்படையில் தான் இருக்கும். இந்த வகையில் தான் தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இயற்கை எரிவாயு விலை

இயற்கை எரிவாயு விலை

இதற்கிடையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு விலை தற்போது 1.79 டாலராக இருந்த நிலையில் 62 சதவீதம் அதிகரித்து 2.90 டாலராக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இயற்கை எரிவாயு-வை mmBtu அளவில் கணக்கிடப்படும். இதேபோல் கடல் பகுதிகள் மற்றும் இதர கடுமையான பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு விலையை 3.62 டாலரில் இருந்து 6.13 டாலர் வரையில் உயர்த்தியுள்ளது.

நிலக்கரி மின்சாரம்

நிலக்கரி மின்சாரம்

மேலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 70 சதவீதம் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தான். இந்த சூழ்நிலையில் இந்தியாவில் இருக்கும் நிலக்கரி மின்சார உற்பத்தி தளத்தில் இன்னும் 4 மட்டுமே போதுமான அளவுக்கு நிலக்கரி இருப்பு உள்ளது. இதனால் மின்சார பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகள் அகிகமாக உள்ளது.

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்சாரம் ஆகிய அனைத்தும் டிமாண்ட் அண்ட் சப்ளை பிரச்சனை காரணமாக அதிகரித்துள்ள நிலையில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மிகப்பெரிய வர்த்தக பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+