இந்திய மக்கள் கொரோனா தொற்று உடன் போராடி வரும் வேளையில், தற்போது விலைவாசி உடனும் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. மத்திய அரசு கொரொனா தொற்றுக் காரணமாக நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்தும் மோசமான நிலையிலும் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகிறது.
மே 31ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் நாட்டின் நிலையும், மக்களின் நிலையையும் சற்று புரிந்துக்கொள்ளமல் கண்ணை மூடிக்கொண்டு 2வது நாளாக ஜூன் 1ஆம் தேதியும் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அறிவித்துள்ள விலை உயர்வின் படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 23 முதல் 26 பைசா வரையிலும் அதிகரித்துள்ளது. இதோடு ஒரு லிட்டர் டீசல் விலை 23 முதல் 26 பைசா வரையில் அதிகரித்துள்ளது.
பெட்ரோல் விலை நிலவரம்
இன்றைய விலை உயர்வின் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் 95.99 ரூபாய்க்கும், டெல்லியில் 94.49 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 94.50 ரூபாய்க்கும், மும்பையில் 100.72 ரூபாய்க்கும், பெங்களூரில் 97.64 ரூபாய்க்கும், ஹைதராபாத்தில் 98.20 ரூபாய்க்கும், கோழிக்கோடு-ல் 94.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலை நிலவரம்
இதன் மூலம் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 90.12 ரூபாய்க்கும், டெல்லியில் 85.38 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 88.23 ரூபாய்க்கும், மும்பையில் 92.69 ரூபாய்க்கும், பெங்களூரில் 90.51 ரூபாய்க்கும், கோழிக்கோடு-ல் 90.29 ரூபாய்க்கும், ஹைதராபாத்தில் 93.08 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை
இதற்கிடையில் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் 67.61 ரூபாய்க்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 70.18 டாலருக்கும், OPEC கச்சா எண்ணெய் 67.32 டாலருக்கும் உயர்ந்துள்ளது.
அதிகம் கலால் வரி
மத்திய அரசு ஒரு பக்கம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி அதிகரித்துள்ள நிலையில், தற்போது கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. இந்த நிலையைச் சமாளிக்க மத்திய அரசு வரியைக் கட்டாயம் குறைக்க வேண்டும்.
More From GoodReturns

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

நாடு முழுவதும் உயர்த்தப்பட்டது பிரீமியம் பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!



Click it and Unblock the Notifications