பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு.. மீண்டும் புதிய உச்சம்..!

பண்டிகை காலம் நெருங்க நெருங்க மக்களின் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது சமையல் சிலிண்டர், சமையல் எண்ணெய், காய்கறி ஆகியவற்றைத் தொடர்ந்து கடந்த 1 மாதமாக மக்களை அதிகளவில் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை 2 நாள் இடைவேளையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

இன்றைய விலை உயர்வுக்கு நேற்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு தான் முக்கியக் காரணமாக உள்ளது.

3 எண்ணெய் நிறுவனங்கள்

3 எண்ணெய் நிறுவனங்கள்

இந்தியாவில் ரீடைல் விற்பனை சந்தையில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் மிக முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்றும் இணைந்து இன்று பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இன்று மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் 3 கச்சா எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 30 பைசா முதல் 35 பைசா வரையிலும், ஒரு லிட்டர் டீசல் விலையை 34 பைசாவில் இருந்து 37 பைசா வரையில் அதிகரித்துள்ளது. இதன் மூலம் இன்று நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் விலை வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இதேவேளையில் சர்வதேச சந்தையில் இன்று ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை நேற்றைய விலையை விடவும் 0.60 சதவீதம் சரிந்து 82.46 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.48 சதவீதம் சரிந்து 84.67 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

 வரி வருமானம்

வரி வருமானம்

நேற்றைய விலை உயர்வின் வாயிலாகத் தான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது, ஆனால் இன்று கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், நாளை பெட்ரோல், டீசல் விலை குறையும் என நினைக்க வேண்டாம். மத்திய அரசு அதிக வரி வருமானத்திற்காக விலை குறைக்காமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இன்றைய பெட்ரோல் விலை (Oct 20)

இன்றைய பெட்ரோல் விலை (Oct 20)

சென்னை - 103.31 ரூபாய், டெல்லி - 106.19 ரூபாய், கொல்கத்தா - 106.77 ரூபாய், மும்பை - 112.11 ரூபாய், பெங்களூர் - 109.89 ரூபாய், ஹைதராபாத் - 110.46 ரூபாய், கோழிக்கோடு - 106.66 ரூபாய், போபால் - 114.81 ரூபாய், இந்தூர்- 114.85 ரூபாய்.

 இன்றைய டீசல் விலை (Oct 20)

இன்றைய டீசல் விலை (Oct 20)

சென்னை - 99.26 ரூபாய், டெல்லி - 94.92 ரூபாய், கொல்கத்தா - 98.03 ரூபாய், மும்பை - 102.89 ரூபாய், பெங்களூர் - 100.75 ரூபாய், ஹைதராபாத் - 103.56 ரூபாய், கோழிக்கோடு - 100.40 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+