பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் விலைவாசியை குறைத்து பணவீக்க பாதிப்பில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்க வேண்டிய முக்கியமான பணியில் இருக்கிறது. இதற்காக வெங்காயம், அரிசி, கோதுமை ஆகியவற்றின் விலையை குறைக்க சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது.
இவை அனைத்தையும் தாண்டி பல மாதங்களாக குறைக்கப்படாமல் இருந்த சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு 200 ரூபாய் திடீரென குறைத்தது. இந்த நிலையில் தான் மக்கள் மத்தியில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் இன்று சந்தை நிலவரமோ வேறு.

சவூதி அரேபியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கச்சா எண்ணெய் விலையை உயர்த்த வேண்டும் என திட்டமிட்டு தானாக முன்வந்து உற்பத்தியை குறைத்து சப்ளை கட்டுப்பாடுகளை எதிர்பாராதவிதமாக கூடுதல் காலம் நீட்டித்தது.
இதன் பிறகு, சர்வதேச சந்தையில் உலக நாடுகளின் தேவைக்கு இணங்க கச்சா எண்ணெய் சப்ளை பற்றாக்குறை உருவாகும் என்ற அச்சத்தால் இதன் விலை கடந்த வாரம் பத்து மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் மேலும் விகித உயர்வுகளில் தாமதம் மற்றும் சீனாவின் அதிகப்படியான எரிபொருள் தேவை ஆகியவை தேவையை அதிகரித்ததுள்ளது. இந்த நிலையில் சவூதி அரேபியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் முடிவு கச்சா எண்ணெய் விலையை பெரிய அளவில் பாதித்துள்ளது.
அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 88 டாலர் அளவில் போராடிக்கொண்டு இருந்த வேளையில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 90 டாலருக்கு மேல் சென்றது. 90 டாலர் விலை நிலவரம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு முதல் முறை தற்போது எட்டியுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கும் என்பது தான் முக்கியமான பிரச்சனையே.
ஏப்ரல் மாதத்தில், ஒபெக் பிளஸ் என அழைக்கப்படும் ரஷ்யா உள்ளிட்ட முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகள், சந்தை ஸ்திரத்தன்மையை ஆதரிக்கும் நோக்கில் 2024 வரை நீட்டிக்க திட்டமிட்டு ஒருங்கிணைந்த உற்பத்தி குறைப்பை அறிவித்தன. அப்போதே சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் பெரும் சுமை வைக்கப்பட்டது.
இந்த நிலையில் சவுதி அரேபியாவும் ரஷ்யாவும் தானாக முன்வந்து OPEC கூட்டணி நாடுகளின் பரந்த ஒப்பந்தத்தின் மேல் உற்பத்தியில் கூடுதல் குறைப்புகளை அறிமுகப்படுத்தின. இதனால் இந்த பார்மூலா-வை பிற முக்கிய நாடுகளையும் ஈர்த்தது.
சவூதி ஜூலை முதல் ஒரு நாளைக்கு 1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயைக் குறைப்பதாக அறிவித்தது, அதே நேரத்தில் ரஷ்யா தினசரி உற்பத்தியை 300,000 பேரல் உற்பத்தியை குறைக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் அக்டோபர் வரை இந்த உற்பத்தி குறைப்பை தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது டிசம்பர் இறுதி வரை நீட்டித்துள்ளது.
இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையும் வாய்ப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது, ஆனால் பல மாநில தேர்தல், 2024 ஆம் ஆண்டு பொது தேர்தல் என பல விஷயங்கள் இருக்கும் காரணத்தால் எரிபொருள் விலை குறைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது.


Click it and Unblock the Notifications