இந்தியாவில் 3 மாதங்களுக்கு அதிகமாகப் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 112 டாலரை தாண்டி உள்ளது.
இந்த நிலையில் அடுத்த வாரம் 5 மாநில தேர்தல் முடியும் நிலையில், மத்திய அரசு சர்வதேச சந்தை விலைக்கு இணையாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த துவங்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
கச்சா எண்ணெய் விலை
கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட போது மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை நவம்பர் மாதம் குறைத்து நாட்டின் வர்த்தக வளர்ச்சிக்கு உதவியது. இதைத் தொடர்ந்து 5 மாத தேர்தல் காரணமாக நவம்பர் மாத பாதியில் இருந்து எரிபொருள் விலையில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விநியோகமும், கச்சா எண்ணெய் இருப்பு அளவும் உலக நாடுகளில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை தற்போது 112 டாலர் அளவீட்டை கடந்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்கு பின்பு மீண்டும் கச்சா எண்ணெய் விலை இந்த நிலையை அடைந்துள்ளது.
இந்தியா
மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி இந்தியா வாங்கும் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 102 டாலராக உள்ளது. வளைகுடா நாடுகள் உடனான நீண்ட கால ஒப்பந்தம் மூலம் இந்தியாவிற்குச் சில நாடுகள் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இந்த 102 டாலர் விலை என்பது ஆகஸ்ட் 2014ஆம் ஆண்டின் உச்ச விலையாகும்.
லிட்டருக்கு 9 ரூபாய்
2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா சராசரியாக 81.5 டாலர் விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. கடந்த 3.5 மாதத்தில் கச்சா எண்ணெய் விலை சுமார் 20 டாலர் உயர்ந்து உள்ளது. இதனால் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சுமார் 9 ரூபாய் வரையில் உயர்த்தப்பட வேண்டும்.
ஜேபி மோர்கன்
அடுத்த வாரம் 5 மாநிலத்தில் தேர்தல் முடியும் நிலையில், இந்த 9 ரூபாய் வித்தியாசத்தைச் சரி செய்ய மத்திய அரசு அடுத்த வாரம் முதல் பெட்ரோல், டீசல் விலையை ஈடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என ஜேபி மோர்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications