உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோரான இந்தியாவில், இரண்டாம் கட்ட கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ள நிலையில் பற்பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து எரிபொருள்களுக்கான தேவையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதற்கிடையில் சர்வதேச சந்தையில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையினால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையானது வரலாறு காணாத அளவு உச்சத்தினை தொட்டு வருகின்றது.
உற்பத்தி குறைப்பு
ஒரு புறம் உருமாறிய கொரோனாவின் தாக்கம் என்பது அச்சம் கொள்ளக்கடிய விஷயமாக இருந்தாலும், மறுபுறம் தளர்வுகளின் மத்தியில் தேவையானது மீண்டும் அதிகரித்து வருகின்றது. இது இந்தியாவில் மட்டும் அல்ல, சர்வதேச அளவிலும் தேவையானது மீண்டு வரத் தொடங்கியுள்ளது. எனினும் இரண்டாம் கட்ட கொரோனா பரவலின்போது தேவையானது மோசமான சரிவினை கண்ட போது, மோசமான விலை சரிவினைக் தடுக்க எண்ணெய் நிறுவனங்கள் உற்பத்தியினை குறைத்தன.
ராக்கெட் வேகத்தில் உயரும் எரிபொருள் விலை
ஆனால் தற்போது வரையில் உற்பத்தியினை மீண்டும் அதிகரிக்கவில்லை. இதற்கிடையில் தேவை அதிகரிப்புக்கு மத்தியில், உற்பத்தி குறைவாக உள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலையானது உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இதற்கிடையில் அதிகளாவிலான எண்ணெய்-யை இறக்குமதி செய்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் எரிபொருட்கள் விலையானது ராக்கெட் வேகத்தில் உச்சம் தொட்டு வருகின்றன.
ஏற்ற தாழ்வுக்கு என்ன காரணம்?
பெட்ரோல் டீசல் விலையானது மாநிலத்துக்கு மாநிலம் வரி வித்தியாசத்தினால், விலை ஏற்றத்தாழ்வில் காணப்படுகிறது. இந்தியாவினை பொறுத்தவரையில் கச்சா எண்ணெய் விலையோடு சேர்த்து, மக்கள் அதிகளவு வரியினையும் செலுத்துக்கின்றனர். கடந்த ஆண்டில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்ட நிலையில், அரசு லிட்டர் பெட்ரோலுக்கு 21.58 ரூபாய் வரியும், டீசலுக்கு 19.18 ரூபாயும் வரியும் அதிகரித்த பிறகு, பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத விலையை எட்டியது. ஆக மொத்தத்தில் பெட்ரோலுக்கு வரியாக 32.90 ரூபாயும், டீசலுக்கு வரியாக 31.80 ரூபாயும் விதிக்கப்படுகிறது.
இன்றைய விலை நிலவரம்
பெட்ரோல் விலை நிலவரம்
டெல்லி - ரூ.100.56
கொல்கத்தா - ரூ.100.62
மும்பை - ரூ.106.59
சென்னை - ரூ.101.45
பெங்களுர் - ரூ.103.93
டீசல் விலை நிலவரம்
டெல்லி - ரூ.89.62
கொல்கத்தா - ரூ.92.65
மும்பை - ரூ.97.18
சென்னை - ரூ.94.23
பெங்களுர் - ரூ.94.99
தமிழ் நாட்டில் என்ன நிலவரம்?
பெட்ரோல் விலை நிலவரம்
சென்னை- ரூ.101.45
கோயமுத்தூர் - ரூ.101.86
ஈரோடு - ரூ.101.88
மதுரை - ரூ.101.93
நாமக்கல் - ரூ.101.97
சேலம் - ரூ.102.57
திருப்பூர் - 107.96
தஞ்சாவூர் - 102.48
திருச்சி - 101.81
திருநெல்வேலி - 101.77
தேனி - 102.65
விருது நகர் - 102.41
டீசல் விலை நிலவரம்
சென்னை- ரூ.94.23
கோயமுத்தூர் - ரூ.94.65
ஈரோடு - ரூ.94.68
மதுரை - ரூ.94.73
நாமக்கல் - ரூ.94.77
சேலம் - ரூ.95.34
திருப்பூர் - 94.75
தஞ்சாவூர் - ரூ.95.26
திருச்சி - ரூ.101.81
திருநெல்வேலி - ரூ.94.60
தேனி - ரூ.95.43
விருது நகர் - ரூ.95.22


Click it and Unblock the Notifications