கச்சா எண்ணெய் விலையில் பல ஏற்ற இறக்கம் இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தனது உச்ச விலையில் தான் பல வாரங்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் உற்பத்தி பொருட்கள் முதல் விற்பனை பொருட்களின் விலை வரையில் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் போக்குவரத்து இல்லாமல் எந்தப் பொருட்களையும் விற்பனையோ அல்லது வர்த்தகத்தையோ செய்ய முடியாது. இதனால் அனைத்து பொருட்களின் விலையிலும் குறிப்பிட்ட சதவீதம் எரிபொருள் விலை சார்ந்து உள்ளது. இதனாலேயே தற்போது கார் மற்றும் பைக் உற்பத்தி நிறுவனங்கள் தனது தயாரிப்புகளின் விலையை அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
18 நாட்களுக்குப் பின்பு வெள்ளிக்கிழமை மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் டீசல் விலையை 20 முதல் 25 பைசா வரையில் உயர்த்தியுள்ளது மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது. ஆனால் நேற்று பெட்ரோல் விலை அதிகரிக்கப்படாத காரணத்தால் இன்று பெட்ரோல் விலை அதிகரிக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்
இன்று கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தனது பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. இது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது மட்டும் அல்லாமல் நிம்மதியையும் அளித்துள்ளது. இதன் மூலம் சாமானிய மக்கள் தினமும் பயன்படுத்தும் பெட்ரோல் விலை 20 நாட்களாக எவ்விதமான விலை மாற்றமும் இல்லாமல் உள்ளது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அனைத்தும் அதிகரித்துள்ளது. தற்போது ஓரு பேரல் WTI கச்சா எண்ணெய் 73.98 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 78.09 டாலருக்கும், OPEC பேஸ்கட் கச்சா எண்ணெய் 75.44 டாலருக்கும், இந்திய பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை 74.73 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
ஒரு மாத உயர்வு
WTI கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு மாதத்தில் 67.42 டாலரில் இருந்து தற்போது 73.98 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் இந்தியா அதிகம் கச்சா எண்ணெய் வாங்கும் OPEC நாடுகளில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் ஒரு மாதத்தில் 70.75 டாலரில் இருந்து 75.44 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலான நாடுகளில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாறவில்லை.
இன்றைய பெட்ரோல் விலை (Sep.25)
சென்னை - 98.46 ரூபாய்
டெல்லி - 101.19 ரூபாய்
கொல்கத்தா - 101.62 ரூபாய்
மும்பை - 107.26 ரூபாய்
பெங்களூர் - 104.70 ரூபாய்
ஹைதராபாத் - 105.26 ரூபாய்
கோழிக்கோடு - 101.65 ரூபாய்
இன்றைய டீசல் விலை (Sep.25)
சென்னை - 93.46 ரூபாய்
டெல்லி - 88.82 ரூபாய்
கொல்கத்தா - 91.92 ரூபாய்
மும்பை - 96.41 ரூபாய்
பெங்களூர் - 94.27 ரூபாய்
ஹைதராபாத் - 96.92 ரூபாய்
கோழிக்கோடு - 93.97 ரூபாய்
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications