உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோரான இந்தியாவில், உருமாற்றம் அடைந்துள்ள கொரோனாவின் பரவல் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனினும் கட்டுப்பாடுகளில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
எண்ணெய் நுகர்வானது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலையானது தொடர்ந்து ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.
எனினும் இரண்டாவது நாளாக இன்று விலையில் மாற்றம் இல்லாவிட்டாலும், தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகின்றது.
பல நகரங்களில் ரூ.105
பல மெட்ரோ நகரங்களிலும் பெட்ரோல் விலையானது 105 ரூபாயினையும் தாண்டியுள்ளது. நாட்டில் வரலாறு காணாத அளவு புதிய உச்சத்தினை எரிபொருட்கள் விலையானது அதிகரித்துள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஏற்கனவே வரி விகிதங்களுடன் சேர்த்து விலை உச்சத்தில் உள்ளது.
கச்சா எண்ணெய் விலை
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. எப்படியிருப்பினும் ஓபெக் நாடுகள் தற்போது உற்பத்தியினை அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலையானது சற்று குறைந்துள்ளது. இது இந்தியா போன்ற அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
சாமனிய மக்களுக்கு அழுத்தம்
ஏனெனில் தேவை அதிகரித்து வரும் இந்த சமயத்தில் விலையானது குறையாவிட்டால், இது இன்னும் எந்தளவுக்கு பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்குமோ? இன்று மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறியுள்ள எரிபொருட்கள் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருவது சாமனிய மக்களின் பாக்கெட்டுகளை பதம் பார்க்க தொடங்கியுள்ளது.
கொரோனா பரவல் குறித்த அச்சம்
குறிப்பாக நாட்டில் இரண்டாம் கட்ட பரவலானது குறையத் தொடங்கியிருந்தாலும், உருமாற்றம் அடைந்த கொரோனாவின் தாக்கமானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் இன்னும் அச்சமே நிலவி வருகின்றது. குறிப்பாக கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், பொது போக்குவரத்துகளும் தொடங்கியிருந்தாலும், மக்கள் பயன்படுத்த பயப்படுகின்றனர் என்றே கூறலாம்.
அதிகரிக்கும் தேவை
ஏனெனில் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகும் போது, கொரோனா பெருந்தொற்று குறித்த அச்சமும் நிலவி வருகின்றது. ஆக மக்கள் தனியார் வாகனங்களையே நாடத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக தேவையானது இன்னும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றது. இதனால் விலைவாசி அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வந்தது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக சப்ளையும் குறைவாகவே இருந்து வருகின்றது.
இன்றைய விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலை
டெல்லி - ரூ.101.84
கொல்கத்தா - ரூ.102.08
மும்பை - ரூ.107.83
சென்னை - ரூ.102.49
பெங்களுர் - ரூ.105.25
பாட்னா - ரூ.104.39
ஹைத்ராபாத் - ரூ.105.83
டெல்லி - ரூ.89.87
கொல்கத்தா - ரூ.93.02
மும்பை - ரூ.97.45
சென்னை - ரூ.94.39
பெங்களுர் - ரூ.95.26
பாட்னா - ரூ.95.64
ஹைத்ராபாத் - ரூ.97.96
தமிழகத்தில் என்ன?
தமிழகத்தில் என்ன நிலவரம்?
பெட்ரோல், டீசல் விலை
சென்னை - ரூ.102.49
கோயமுத்தூர் - ரூ.102.96
சேலம் - ரூ.103.31
மதுரை - ரூ.103.06
ஈரோடு - ரூ.103.07
திருநெல்வேலி - ரூ.
திருவண்ணாமலை - ரூ.104.15
விழுப்புரம் - ரூ.103.75
சென்னை - ரூ.94.39
கோயமுத்தூர் - ரூ.94.86
சேலம் - ரூ.95.21
மதுரை - ரூ.94.98
ஈரோடு - ரூ.94.97
திருநெல்வேலி - ரூ. 94.79
திருவண்ணாமலை - ரூ.95.98
விழுப்புரம் - ரூ.95.60
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!



Click it and Unblock the Notifications