இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7 நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் நேற்றும், இன்றும் பொதுத்துறை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இதன் விலையில் எவ்விதமான உயர்வும் செய்யாமல் மக்களுக்குச் சாதகமாக நடந்துகொண்டு உள்ளது.
இதேவேளையில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது, ஆனாலும் இந்தியாவில் இதன் விலையைக் குறைக்காமல் அப்படியே வைத்துள்ளது மக்களைப் பாதிக்கிறது.
மேலும் இந்தியா முழுவதும் தற்போது தசரா மற்றும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் காரணத்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை எனச் சந்தையில் கருத்து நிலவுகிறது.
பெட்ரோல், டீசல் விலை
மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் செவ்வாய் மற்றும் புதன்கிழமை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை என்றாலும், இந்தியாவில் எரிபொருள் விலை வரலாற்று உச்சத்தில் உள்ளது.
செப்டம்பர் 5 முதல்
செப்டம்பர் 5ஆம் தேதி வரையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருந்து பெட்ரோல், டீசல் விலை OPEC கூட்டத்திற்குப் பின்பு தொடர்ந்து விலையை அதிகரித்து வருகிறது. மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் விற்பனையில் அதிகப்படியான வரி வருமானம் கிடைக்கும் என்பதால் தொடர்ந்து விலையை உயர்த்தி வந்தது.
சப்ளை டிமாண்ட் பிரச்சனை
ஆனால் இதேவேளையில் உலக நாடுகளில் அதிகப்படியான எரிபொருள் தேவை இருக்கும் காரணத்தாலும், கச்சா எண்ணெய் உற்பத்தி பெரிய அளவில் அதிகரிக்கப்படாத காரணத்தாலும் சப்ளை டிமாண்ட் பிரச்சனையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 75 டாலரில் இருந்து 83 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிவு
கடந்த 2 நாட்களாகக் கச்சா எண்ணெய் விலை கணிசமாகச் சரிவை சந்தித்துள்ள போதிலும் இந்தியாவில் எவ்விதமான மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது. இதேவேளையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 75.25 ரூபாயாக உள்ளது.
சென்னை பெட்ரோல் டீசல் விலை
இரண்டு நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாத நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101.79 ரூபாய்க்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 97.59 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications