நீண்ட காலமான இழுத்து வந்த ஈரான் உடன் உலக நாடுகள் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை வருகிற ஜூன் 10ஆம் தேதி நடக்க உள்ளது.
இதன் காரணமாகக் கச்சா எண்ணெய் சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்களது ஒப்பந்தத்தை விற்பனை செய்து வருகின்றனர். இதன் வாயிலாகவே கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு நாட்களாகச் சரிவடைந்து வருகிறது.
திங்கட்கிழமை வர்த்தகச் சரிவைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும், கச்சா எண்ணெய் சந்தையில் தொடர்ந்து முதலீட்டாளர்கள் அதிகளவிலான ஒப்பந்தங்களை விற்பனை செய்து வருகின்றனர். ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் குறையவில்லை.
கச்சா எண்ணெய் விலை
இதன் வாயிலாக இன்றைய வர்த்தகத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 0.72 சதவீதம் வரையில் சரிந்து 68.73 டாலருக்கும், WTI கச்சா எண்ணெய் விலை 0.77 சதவீதம் சரிந்து 70.94 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிவு
இரண்டு நாட்களாகக் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எவ்விதமான மாற்றமும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் செய்யவில்லை. இதன் மூலம் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லை.
பெட்ரோல் விலை
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்
- சென்னை : 96.23 ரூபாய்
- டெல்லி : 94.76 ரூபாய்
- கொல்கட்டா : 94.76 ரூபாய்
- மும்பை : 100.98 ரூபாய்
- பெங்களூர் : 97.92 ரூபாய்
- ஹைதராபாத் : 98.48 ரூபாய்
- கோழிக்கோடு : 95.17 ரூபாய்
டீசல் விலை
இன்றைய டீசல் விலை நிலவரம்
- சென்னை : 90.38 ரூபாய்
- டெல்லி : 85.66 ரூபாய்
- கொல்கட்டா : 88.51 ரூபாய்
- மும்பை : 92.99 ரூபாய்
- பெங்களூர் : 90.81 ரூபாய்
- ஹைதராபாத் : 93.38 ரூபாய்
- கோழிக்கோடு : 90.59 ரூபாய்
2015 அணுசக்தி ஒப்பந்தம்
2015 அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரான் உடன் உலக நாடுகள் மத்தியிலான பேச்சுவார்த்தை நீண்ட காலமாக மந்தமடைந்து உள்ளது, இந்த இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் வர்த்தகச் சந்தை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஈரான் கச்சா எண்ணெய்
இந்நிலையில் வருகிற ஜூன் 10ஆம் தேதி வியன்னா-வில் ஈரான் உடன் உலக நாடுகள் மத்தியில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த 5வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா ஈரான் விதித்திருந்த வர்த்தகத் தடைகள் நீக்கப்பட்டு ஈரான் கச்சா எண்ணெய் சர்வதேச வர்த்தகச் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications