சென்னை: இந்தியாவில் நாள்தோறும் காலை 6 மணிக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கச்சா எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் அறிவித்து வரும் கட்டமைப்பில் இயங்கினாலும் இந்திய அரசு எரிபொருள் விலையில் மாற்றம் ஏதும் இன்றி நிலையான விலையை பராமரித்து வருகிறது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன. மாதம் ஒரு முறை விலை மாற்றும் கட்டமைப்பை மோடி தலைமையிலான அரசு தினசரி அடிப்படையில் விலை மாற்றம் செய்து வந்தது, ஆனால் கடந்த சில வருடங்களாக தினசரி சந்தை நிலவரத்திற்கு ஏற்ப விலையை மாற்றுவதை நிறுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த 157 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.75 ஆகவும், டீசல் விலை ரூ.92.34 ஆகவும் உள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிப்பதில் முக்கிய காரணிகளாக உள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக சர்வதேச சந்தையில் சரிந்த கச்சா எண்ணெய் விலை இன்று ஓரளவு உயர்ந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான போர் தொடர்பான கவலைகள் குறைந்ததால் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அதேசமயம், சீனாவின் பொருளாதார நிலை பலவீனமாக இருப்பதால் எண்ணெய் தேவை குறையும் என்ற எதிர்பார்ப்பும் கச்சா எண்ணெய் விலையை பாதித்துள்ளது.
இதன் மூலம் இன்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 77.85 டாலராகவும், அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 73.85 டாலராகவும் உள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா ஒரு திட்டத்தை முன்வைத்திருந்தது. அந்த திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் அந்தோனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். ஹமாஸ் தனது பங்குக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
More From GoodReturns

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications