பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இன்று லீவ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு ஆகியவை இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை 7 நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு லீவ் விடப்பட்டு உள்ளது.

ஆம் அக்டோபர் 12ஆம் தேதி மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரீடைல் எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்விதமான மாற்றத்தையும் செய்யாமல் உள்ளது.

7 நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று ஒரு நாள் விலை உயராமல் இருப்பது மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை 4 நாட்களுக்கு மீண்டும் குறைந்தது... இன்றைய விலை நிலவரம் என்ன? பெட்ரோல், டீசல் விலை 4 நாட்களுக்கு மீண்டும் குறைந்தது... இன்றைய விலை நிலவரம் என்ன?

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இன்று சர்வதேச சந்தையில் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 0.12 சதவீதம் சரிந்து 80.42 டாலருக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.02 சதவீதம் சரிந்து 83.63 டாலருக்கும் குறைந்துள்ள காரணத்தால் இன்று இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு லீவ் விடப்பட்டு உள்ளது.

அக்டோபர் 6

அக்டோபர் 6

இந்தியாவில் கடந்த ஒரு மாதமாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகிறது. ஆனால் அக்டோபர் 6ஆம் தேதி முதல் தொடர்ந்து ஒரு நாள் கூட இடைவிடாமல் பெட்ரோல் விலை 30 பைசாவும், டீசல் விலை 35 பைசாவும் தினமும் அதிகரித்து வருகிறது.

கேரளா, கர்நாடகா

கேரளா, கர்நாடகா

இந்தியாவில் தொடர்ந்து டீசல் விலை அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு லீட்டர் டீசல் விலை கேரளா, கர்நாடகா, ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் லே ஆகிய பகுதிகளில் 100 ரூபாயை தாண்டியுள்ளது.

இன்றைய பெட்ரோல் விலை (Oct 12)

இன்றைய பெட்ரோல் விலை (Oct 12)

சென்னை - 101.79 ரூபாய், டெல்லி - 104.44 ரூபாய், கொல்கத்தா - 105.09 ரூபாய், மும்பை - 110.41 ரூபாய், பெங்களூர் - 108.08 ரூபாய், ஹைதராபாத் - 108.64 ரூபாய், கோழிக்கோடு - 104.91 ரூபாய், போபால் - 113.00 ரூபாய், இந்தூர்- 113.04 ரூபாய்.

இன்றைய டீசல் விலை (Oct 12)

இன்றைய டீசல் விலை (Oct 12)

சென்னை - 97.59 ரூபாய், டெல்லி - 93.17 ரூபாய், கொல்கத்தா - 96.28 ரூபாய், மும்பை - 101.03 ரூபாய், பெங்களூர் - 98.89 ரூபாய், ஹைதராபாத் - 101.66 ரூபாய், கோழிக்கோடு - 98.56 ரூபாய்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Petrol diesel price unchanged on oct 12: After 7 days of price Hike

Petrol diesel price unchanged on oct 12: After 7 days of price Hike
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X