பெட்ரோல் விலை 17 நகரங்களில் 110ஐ தாண்டியது.. மக்கள் அவதி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் 5 நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வந்த விலையில் இன்று எவ்விதமான மாற்றத்தையும் அறிவிக்காதது சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கு முக்கியமான விஷயமாக உள்ளது.

முதல் நாளே சரிவு தான்.. என்ன காரணம்.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம் என்ன..! முதல் நாளே சரிவு தான்.. என்ன காரணம்.. சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம் என்ன..!

ஒருபக்கம் அதீத மழை மற்றும் சப்ளை செயின் பாதிப்பு, மறுபக்கம் எரிபொருள் விலை உயர்வு மூலம் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மக்கள் தினமும் பயன்படுத்தும் பல பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

ரீடைல் எரிபொருள் சந்தை

ரீடைல் எரிபொருள் சந்தை

இந்திய ரீடைல் எரிபொருள் விற்பனை சந்தையில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் அதிகளவிலான ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்நிறுவனம் அறிவித்து வரும் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலை

கடந்த 5 நாட்களாகத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் வேளையில் இன்று விலை உயர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆனாலும் இந்தியாவில் சுமார் 17 நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110 ரூபாயைக் கடந்துள்ளது, இதேபோல் 13 மாநிலத்தில் டீசல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது.

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

இந்தியாவில் தற்போது இந்த 17 நகரங்களில் பெட்ரோல் விலை 110 ரூபாயைக் கடந்துள்ளது.

இந்தூர் - 116.3 ரூபாய்
போபால் - 116.26 ரூபாய்
அவுரங்காபாத் - 115.04 ரூபாய்
ஜெய்ப்பூர் - 114.84 ரூபாய்
நாசிக் - 113.81 ரூபாய்
தானே - 113.6 ரூபாய்
கோலாப்பூர் - 113.52 ரூபாய்
மும்பை - 113.46 ரூபாய்
நாக்பூர் - 113.16 ரூபாய்
புனே - 112.97 ரூபாய்
விசாகப்பட்டினம் - 112.66 ரூபாய்
ஹைதராபாத் - 111.91 ரூபாய்
பெங்களூரு - 111.34 ரூபாய்
பாட்னா - 111.24 ரூபாய்
மைசூர் - 110.84 ரூபாய்
மங்களூர் - 110.49 ரூபாய்
ஸ்ரீநகர் - 110.47 ரூபாய்

டீசல் விலை

டீசல் விலை

இதேபோல் வரலாற்று உச்ச அளவான ஒரு லிட்டர் டீசல் விலை 12 மாநிலத்தில் 100 ரூபாயை கடந்துள்ளது.

ராஜஸ்தான் - 106.09 ரூபாய்
மத்திய பிரதேசம் - 105.67 ரூபாய்
தெலுங்கானா - 105.08 ரூபாய்
ஒடிசா - 105.07 ரூபாய்
சத்தீஸ்கர் - 104.09 ரூபாய்
குஜராத் - 103.7 ரூபாய்
மகாராஷ்டிரா - 103.65 ரூபாய்
பீகார் - 102.93 ரூபாய்
கேரளா - 101.87 ரூபாய்
கர்நாடகா - 101.81 ரூபாய்
ஜார்கண்ட் - 101.59 ரூபாய்
தமிழ்நாடு - 100.98 ரூபாய்

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இதேவேளையில் இன்று சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. WTI கச்சா எண்ணெய் விலை 0.92 சதவீதம் வரையில் உயர்ந்து 84.53 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.80 சதவீதம் அதிகரித்து 86.21 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Petrol diesel price Unchanged on October 25; Petrol crosses ₹110 in 17 cities of India

Petrol diesel price Unchanged on October 25; Petrol crosses ₹110 in 17 cities of India
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X